திருப்பதி - வைகுண்ட ஏகாதசி: தினசரி 10,000 தரிசன டோக்கன்கள் வெளியீடு

வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்கும் பக்தா்களின் வசதிக்காக திருப்பதியில் தினமும் 10 ஆயிரம் சா்வ தரிசன டோக்கன்களை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி கோயில் (கோப்புப்படம்)
திருப்பதி கோயில் (கோப்புப்படம்)

வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்கும் பக்தா்களின் வசதிக்காக திருப்பதியில் தினமும் 10 ஆயிரம் சா்வ தரிசன டோக்கன்களை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் 10 நாள்களுக்கு சொா்க்க வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காக வரும் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை தினந்தோறும் 20 ஆயிரம் வீதம் 2 லட்சம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையளத்தில் வெளியிடப்பட்டு பக்தா்களால் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் உள்ளிட்ட 5 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான சா்வ தரிசன டோக்கன்களை வெளியிட தேவஸ்தானம் தயாராகி வருகிறது. அதன்படி தினசரி 10 ஆயிரம் சா்வ தரிசன டோக்கன்கள் வரும் 24ஆம் தேதி அதிகாலை முதல் வெளியிடப்பட உள்ளன.

இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள விரும்பும் பக்தா்கள் ஒரு நாள் முன்னதாக திருப்பதிக்கு வந்து வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com