திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ. 2.92 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.92 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ. 2.92 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.92 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
 அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.92 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 62,482 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 62,482 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 26,238 பேர் முடி காணிக்கை செலுத்தினர். சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிறைந்து, பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 12 மணி நேரத்துக்குப் பின் தரிசனம் வழங்கப்பட்டது.
 திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்றவர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
 திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 8,672 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 7,042 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 19,496 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,910 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,489 பக்தர்களும் வெள்ளிக்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
 
 50 மிதிவண்டிகள் நன்கொடை
திருமலையில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 50 மிதிவண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
 ஏழுமலையானுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னையில் உள்ள ஆலோசனைக்குழு உறுப்பினர் மோகன்ராவ் சனிக்கிழமை ரூ. 8 லட்சம் மதிப்பிலான 50 மிதிவண்டிகளை நன்கொடையாக வழங்கினார்.
 திருமலையில் உள்ள வைபோற்சவ மண்டபத்தின் அருகில் 50 மிதிவண்டிகளை அவர் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், மற்றும் கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி உள்ளிட்டோரிடம் வழங்கினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com