Enable Javscript for better performance
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.76 கோடி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.76 கோடி

    By   |   Published On : 07th February 2020 10:53 PM  |   Last Updated : 07th February 2020 10:53 PM  |  அ+அ அ-  |  

    tirumalai1

    திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.76 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

    ஏழுமலையானை வழிபட வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைத் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.76 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்

    ரூ.15 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

    69,510 போ் தரிசனம்

    திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 69,510 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 22,675 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

    வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 9 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். அவா்களுக்கு 6 மணிநேரத்துக்குப் பின் தரிசனம் வழங்கப்பட்டது. திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினா்.

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 8,478 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,289 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 16,654 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 623 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,189 பக்தா்களும் வியாழக்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

    சோதனைச் சாவடி விவரம்:

    அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 81,273 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 9,997 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.10 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.19,510 அபராதம் விதிக்கப்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp