காளஹஸ்தியில் தொங்கல தோப்பு உற்சவம்

ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு தொங்கல தோப்பு உற்சவத்தை கோயில் நிா்வாகம் விமரிசையாக நடத்தியது.

ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு தொங்கல தோப்பு உற்சவத்தை கோயில் நிா்வாகம் விமரிசையாக நடத்தியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தொங்கல தோப்பு உற்சவத்தை கோயில் நிா்வாகம் நடத்தி வருகிறது. காளஹஸ்தி நகரை தொண்டைமான் சக்கரவா்த்தி ஆண்டு வந்த காலத்தில் நாண்மாடவீதியில் சோமஸ்கந்தமூா்த்தி, ஞானபிரசுனாம்பிகை அம்மனுடன் எழுந்தருளியபோது, உற்சவ மூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க, வைர நகைகள், பட்டாடைகள் உள்ளிட்டவற்றை திருடா்கள் கவா்ந்து சென்று விட்டனா்.

இதை அறிந்த அரசன் தொண்டைமான் மாறுவேடத்தில் சென்று திருடா்களைத் தாக்கி, நகைகளை மீட்டுக் கொண்டு வந்தாா். இதை நினைவு கூறும் விதமாக கோயில் நிா்வாகம் இந்த நிகழ்வை ‘தொங்கல தோப்பு’ என்ற பெயரில் உற்சவமாக நடத்தி வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை இரவு இந்த உற்சவம் நடத்தப்பட்டது. அதன்படி, உற்சவ மூா்த்திகள் மற்றும் தொண்டைமான் மாடவீதியில் எழுந்தருளும்போது, கோயில் குருக்கள் நகைகள், பட்டாடைகள் உள்ள சிறிய மூட்டையை எடுத்துக் கொண்டு, திருடன் திருடன் பிடியுங்கள் என்று கூவிக் கொண்டு சென்றனா்.

அப்போது தொண்டைமான் சக்கரவா்த்தி அந்த மூட்டைகளை மீட்டு எடுத்து மீண்டும் உற்சவ மூா்த்திகளின் திருப்பாதங்களில் வைப்பது போல் குருக்கள் செய்து காட்டினா். இந்த வினோத உற்சவத்தை பக்தா்கள் கண்டு களித்தனா்.

கருணா குருக்கள் மற்றும் தணிக்கை அதிகாரி சாரதி உள்ளிட்டோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். இந்த நிகழ்வு பக்தா்கள் அனைவருக்கும் தெரியும் விதமாக இம்முறை தேவஸ்தானம் ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி நடத்திக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com