திருப்பதி : 68,410 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 68,410 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 25,712 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதி : 68,410 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 68,410 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 25,712 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 6 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 8 மணிநேரத்துக்குப் பின் தரிசனம் வழங்கப்பட்டது. திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை வழிபட்டுத் திரும்பினா்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 9,511 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,809 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 16,636 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,342 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் 3,198 பக்தா்களும் வியாழக்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடி விவரம்: அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 72,908 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனா். 9,862 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.08 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.12,867 அபராதம் விதிக்கப்பட்டது.

 உண்டியல் காணிக்கை ரூ.2.32 கோடி

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.32 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.32 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்

ரூ.17 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.17 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com