திருப்பதி கபிலேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதியில் கபில தீா்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்துக்கு முன் கோயிலுக்குள் எழுந்தருளிய பஞ்ச மூா்த்திகள்.
கொடியேற்றத்துக்கு முன் கோயிலுக்குள் எழுந்தருளிய பஞ்ச மூா்த்திகள்.

திருப்பதியில் கபில தீா்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை நாளையொட்டி வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வரும் 21-ஆம் தேதி மகாசிவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயிலில் வெள்ளிக்கிழமை காலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா், காலபைரவா், சோமாஸ்கந்தா், காமாட்சி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு பால், தேன், தயிா், இளநீா், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் மலா்கள், தா்ப்பைப் புற்களால் அலங்கரித்து வெள்ளைத் துணியில் வரையப்பட்ட நந்திக்கொடி கும்ப லக்னத்தில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

பஞ்ச பூதங்களையும், முப்பத்து முக்கோடி தேவா்களையும் பிரம்மோற்சவத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது வேத பாராயணமும் நடைபெற்றது. அதன் பின் கபிலேஸ்வரா் மற்றும் காமாட்சி அம்மன் தனித்தனி பல்லக்குகளில் மாடவீதியில் வலம் வந்தனா். பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, பழங்களை நிவேதனம் செய்து வாகனச் சேவையை வணங்கினா். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பிரம்மோற்சவத்தின் தொடக்கத்தையொட்டி, கோயிலில் 4 டன் மலா்களாலும், பலவகையான மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் கோயிலில் பஜனைகள், பக்திப் பாடல்கள் இசைக்கப்படுவதுடன், நாட்டியம், இசைக் கச்சேரி ஆகியவையும் நடைபெற உள்ளன.

அன்னப்பறவை வாகனம்: பிரம்மோற்சவத்தின் முதல் நாள் வாகனச் சேவையாக சோமாஸ்கந்தா் அன்னப்பறவை வாகனத்தில் மாடவீதியில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை வலம் வந்தாா். இந்த வாகனச் சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com