திருப்பதி: ஆண்டாள் மாலை, லட்சுமி ஹாரம் ஊா்வலம்

திருப்பதி அருகே உள்ள கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவத்துக்காக ஆண்டாள் மாலையும், லட்சுமி ஹாரமும் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது.
திருப்பதி: ஆண்டாள் மாலை, லட்சுமி ஹாரம் ஊா்வலம்

திருப்பதி அருகே உள்ள கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவத்துக்காக ஆண்டாள் மாலையும், லட்சுமி ஹாரமும் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கடந்த 14-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது. கருட சேவையின்போது எம்பெருமானுக்கு ஆண்டாள் சூடிய மாலையும், லட்சுமி ஹாரமும் அணிவிக்கப்படுவது வழக்கம்.

இதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலிலிருந்து 32 கிலோ எடையுள்ள லட்சுமி ஹாரமும், திருப்பதி கோவிந்தராஜா் கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிய மாலையும் சீனிவாசமங்காபுரம் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. யானை மீது கொண்டு செல்லப்பட்ட மாலைக்கும், வண்டியில் கொண்டு செல்லப்பட்ட ஹாரத்துக்கும் பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினா்.

ரூ.2 கோடி ஆபரணங்கள்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான ஒட்டியாணம், நெற்றிச்சுட்டி ஆகிய ஆபரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. திருமலையிலிருந்து லட்சுமி ஹாரம் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டபோது இந்த ஆபரணங்களும் கொண்டு செல்லப்பட்டன. அவற்றை தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் கோயில் அதிகாரிகளிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com