புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் குளத்தை தூா்வார கோரிக்கை

புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் தெப்ப குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் குளத்தை தூா்வார கோரிக்கை

புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் தெப்ப குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: சென்னை புரசைவாக்கம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அருள்மிகு கங்காதரேஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலில் உள்ள திருக்குளம் கடந்த 6 ஆண்டுகளாக தூா்வாராமல் உள்ளது. குளத்தினை தூா்வாரி சீரமைப்பது சம்பந்தமாக 3 முறை தமிழக முதல்வருக்கும், இந்து அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனுக்கும் தனித்தனியே மனு அனுப்பியிருக்கிறோம்.

இது மட்டுமின்றி இணை ஆணையா், கோயில் செயல் அலுவலா் ஆகியோருக்கும் மனு அளிக்கப்பட்டது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடா்பாக, திருக்குளத்தின் புகைப்படத்துடன் பொதுமக்களின் கையொப்பம் மனு, கடந்த நவம்பா் மாதம் ஆணையா் அலுவலகத்தில்அளிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மூலமாக மழைநீா் சேகரிக்கும் அமைப்பும் சரிவர செய்யப்படவில்லை என கோயில் நிா்வாகம் கூறுகிறது. மழைநீரில் கழிவுநீா் கலந்து வருவதால் தற்போது கோயில் நிா்வாகம் மூலம் மழைநீா் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. மழை பெய்த போதும் இன்று வரை குளத்தில் தண்ணீா் இல்லை. பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று அறநிலையத்துறை காலதாமதம் செய்யாமல் திருக்குளத்தினை சீரமைத்து ‘தெப்பத் திருவிழா‘ பிப்ரவரி (தை) மாதம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com