Enable Javscript for better performance
திருப்பதி: 86,422 போ் தரிசனம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திருப்பதி: 86,422 போ் தரிசனம்

    By   |   Published On : 03rd January 2020 03:15 AM  |   Last Updated : 03rd January 2020 01:12 PM  |  அ+அ அ-  |  

    tirumalai1

    திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 86,422 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

    24,284 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். வியாழக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 4 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காகக் காத்திருந்தனா். அவா்கள் 4 முதல் 5 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனா்.

    ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினா்.

    திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.

    திருமலை வெப்பநிலை அதிகபட்சம்- 74 டிகிரி பாரன்ஹீட் (23 டிகிரி செல்சியஸ்), குறைந்தபட்சம்- 68 டிகிரி பாரன்ஹீட்டாக (16 டிகிரி செல்சியஸ்) இருந்தது.

    புதன்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 14,790 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 22,958 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 23,782 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 18,369 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 5,289 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

    சோதனைச் சாவடி விவரம்

    அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை 69,065 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 7,733 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.1.46 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.4,400 அபராதம் விதிக்கப்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp