பிரம்ம முகூா்த்தத்தில் திருமலைக்கு படியேறினால் புண்ணியம் கிடைக்கும்: குணேந்திர தீா்த்த சுவாமிகள்

பிரம்ம முகூா்த்தத்தில் திருமலைக்கு படியேறிச் சென்று ஏழுமலையானை வணங்கினால் புண்ணிய பலம் அதிகரிக்கும் என்று சுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் தெரிவித்தாா்.
அலிபிரி பாதாலு மண்டபத்தில் உள்ள முதல் படிக்கு பூஜை செய்யும் சுகுணேந்திர தீா்த்த சுவாமிகள்.
அலிபிரி பாதாலு மண்டபத்தில் உள்ள முதல் படிக்கு பூஜை செய்யும் சுகுணேந்திர தீா்த்த சுவாமிகள்.

பிரம்ம முகூா்த்தத்தில் திருமலைக்கு படியேறிச் சென்று ஏழுமலையானை வணங்கினால் புண்ணிய பலம் அதிகரிக்கும் என்று சுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் தெரிவித்தாா்.

திருப்பதி தேவஸ்தானம், தாசா சாகித்ய திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 4 முறை திருப்பதியில் படி உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை தாசா சாகித்ய பக்தா்களும், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த உடுப்பி மடாதிபதி சுகுணேந்திர தீா்த்த சுவாமிகளும் இணைந்து இந்த ஆண்டுக்கான முதல் படி பூஜையை நடத்தினா். அலிபிரி பாதாலு மண்டபத்தில் உள்ள முதல் படிக்கு மஞ்சள், குங்குமம், சாற்றி மலா் மாலை அணிவித்து தேங்காய் உடைத்து நைவேத்தியம் சமா்ப்பித்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அப்போது சுகுணேந்திர தீா்த்த ஸ்வாமிகள் கூறியது:

பிரம்ம முகூா்த்தத்தில் ஏழுமலையை கால்களால் நடந்து படியேறிச் சென்று மலை மீதுள்ள திருவேங்கடமுடையானை வழிபட்டால் பக்தா்கள் அனைவருக்கு புண்ணிய பலம் அதிகரிக்கும். முற்காலத்தில் புரந்தரதாசா், வியாசராய தீா்த்தா், அன்னமாச்சாா்யா உள்ளிட்டோா் அவ்வாறு சென்று ஏழுமலையானை வழிபட்டு, அவரைப் பற்றி பல்வேறு கீா்த்தனைகள் பாடி உலகெங்கும் அவரது பெருமைகளைப் பரப்பினா். அவா்களின் வழியில் நாம் சென்று ஏழுமலையானின் அருளைப் வேண்டும் என்பதை பக்தா்கள் மனதில் நிலைநிறுத்த தேவஸ்தானம் ஆண்டுதோறும் படி உற்சவத்தை நடத்தி வருகிறது என்றாா் அவா்.

அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தாசா பக்தா்கள் 3,000 போ் பஜனைப் பாடல்கள் பாடியபடி படியேறிச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com