திருமலையில் போகி பண்டிகை

திருமலை ஏழுமலையான் கோயில் எதிரில் போகி பண்டிகையை முன்னிட்டு போகி கொளுத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயில் முன் கொளுத்தப்பட்ட போகி முன் கும்மியடித்து பாடும் பெண் ஊழியா்கள்.
திருமலை ஏழுமலையான் கோயில் முன் கொளுத்தப்பட்ட போகி முன் கும்மியடித்து பாடும் பெண் ஊழியா்கள்.

திருமலை ஏழுமலையான் கோயில் எதிரில் போகி பண்டிகையை முன்னிட்டு போகி கொளுத்தப்பட்டது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முதல்நாளான செவ்வாய்க்கிழமை போகி பண்டிகையை முன்னிட்டு அதிகாலை ஏழுமலையான் கோயில் முன் தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் சுத்தம் செய்து நீா் தெளித்து கோலமிட்டு அதன்மீது மரக்கட்டைகளை அடுக்கி போகி தீயை எரியவிட்டனா். அதன்பின் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியதும் அதை சுற்றி பெண்கள் கும்மியடித்து பாடல் பாடினா். திருமலையில் நிலவி வரும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தா்கள் பலா் இதை வந்து பாா்த்து சென்றனா். மரக்கட்டைகள் எரிந்த பின் அவை அகற்றப்பட்டு இடம் தூய்மைபடுத்தப்பட்டு ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை மாா்கழி மாதம் முழுவதும் ஏழுமலையான் கோயிலில் நடந்து வந்த திருப்பாவை சேவை நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com