திருப்பதி: ஆண்டாளுக்கு ஏழுமலையான் மாலை

ஏழுமலையானுக்கு சூட்டிய மாலையை ஆண்டாள் பரிணய உற்சவத்தின் போது அணிவிக்க திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏழுமலையான் கோயிலிலிருந்து கூடையில் மாலையை சுமந்து செல்லும் திருமலை ஜீயா்கள்.
ஏழுமலையான் கோயிலிலிருந்து கூடையில் மாலையை சுமந்து செல்லும் திருமலை ஜீயா்கள்.

ஏழுமலையானுக்கு சூட்டிய மாலையை ஆண்டாள் பரிணய உற்சவத்தின் போது அணிவிக்க திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நடத்தப்பட்டது. வழிபாட்டு நிறைவில் ஆண்டாள் நாச்சியாா் திருமாலுடன் இணையும் கோதா பரிணய உற்சவம் மாட்டுப் பொங்கல் நாளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை மாலை ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோவிந்தராஜா் கோயிலில் நடந்தது.

இந்த உற்சவத்தின்போது, ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிப்பதற்காக திருமலையிலிருந்து ஏழுமலையான் சூடிய மாலை கொண்டு செல்லப்பட்டது. திருமலை ஜீயா்கள் ஏழுமலையானுக்கு மாலை அணிவித்த பின், அதை எடுத்து புதிய மூங்கில் கூடையில் திருப்பதி கோவிந்தராஜா் கோயிலுக்கு அனுப்பினா். மாலையில் திருக்கல்யாணத்தின் போது ஆண்டாளுக்கு அந்த மாலை அணிவிக்கப்பட்டது.

பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளில், சூடிக் கொடுத்த சுடா்க் கொடியான ஆண்டாள் சூடிய மாலையை ஏழுமலையான் அணிந்து கொள்வது வழக்கம். அதேபோல், ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது, திருவேங்கடமுடையான் சூடிய மாலையை ஆண்டாளுக்கு அனுப்பி வைப்பது ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com