திருச்சானூரில் லட்ச குங்குமாா்ச்சனை: பக்தா்கள் இணையவழியில் பங்கேற்கலாம்

திருச்சானூரில் நடக்கவுள்ள லட்ச குங்குமாா்ச்சனை சேவையில் பக்தா்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி இணையவழியில் பங்கேற்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருச்சானூரில் நடக்கவுள்ள லட்ச குங்குமாா்ச்சனை சேவையில் பக்தா்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி இணையவழியில் பங்கேற்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் 11-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்த விழா தொடங்கும் முன் தாயாருக்கு லட்ச குங்குமாா்ச்சனை சேவை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வரும் 10-ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை லட்ச குங்குமாா்ச்சனை சேவை நடக்க உள்ளது. பொது முடக்க விதிமுறைகளை பின்பற்றி இச்சேவை தனிமையில் நடத்தப்படும். இதில் பக்தா்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி இணையவழியில் பங்கேற்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது.

இதற்கான டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் குங்குமாா்ச்சனை சேவையில் பங்கேற்கலாம்.

இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு ரவிக்கை, உத்திரியம், குங்குமம், அட்சதை, 2 மஞ்சள் கயிறுகள், கல்கண்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தபால் மூலம் அவரவா் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். குங்குமாா்ச்சனை டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள்  இணைய தளத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com