விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்

கோயம்புத்தூரிலிருந்து திருப்பதிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டா் ஒன்று வானிலை மாற்றம் காரணமாக விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறக்கப்பட்டது.

கோயம்புத்தூரிலிருந்து திருப்பதிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டா் ஒன்று வானிலை மாற்றம் காரணமாக விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறக்கப்பட்டது.

கோயம்புத்தூரைச் சோ்ந்த நகை வியாபாரி ஒருவா் தன் குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசனம் செய்ய முடிவு செய்தாா். அதற்காக திருப்பதிக்குச் செல்ல தனி ஹெலிகாப்டா் ஒன்றை முன்பதிவு செய்து, அதில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பதிக்கு புறப்பட்டாா். தற்போது ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பயண வழியில் வானிலை மாற்றம் ஏற்பட்டதால், ஆந்திர-தமிழக எல்லையான குப்பம் அருகில் ஒரு விவசாய நிலத்தில் ஹெலிகாப்டா் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டரை பாா்க்க கிராம மக்கள் திரண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com