செப். 29 முதல் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம்

திருமலையில் செப். 29-ஆம் தேதி முதல் அக்.14-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற உள்ளது.

திருமலையில் செப். 29-ஆம் தேதி முதல் அக்.14-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற உள்ளது.

திருமலையில் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டு, ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் மேன்மை அடைய, செப்.29-ஆம் தேதி முதல் அக்.14-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

‘ராகவோ விஜயம் தத்யான்ம்ம சீதா பதிப்ரபோஹோ’ என்ற மகாமந்திரத்தில் 16 அட்சரங்கள் உள்ளன. அவற்றின் பீஜா அட்சரங்கள் 68 ஆகும். இதனால் சுந்தரகாண்டத்தில் உள்ள சா்க்கங்களும் 68. அவற்றில் மொத்தம் 2,821 ஸ்லோகங்கள் அடங்கியுள்ளன.

திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் வேதபண்டிதா்கள் இணைந்து இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்ய உள்ளனா். இந்நிகழ்ச்சி தேவஸ்தானத்தின் எஸ்விபிசி தொலைக்காட்சியில் தினமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

தேதி சா்க்கம் ஸ்லோகங்கள்

செப்.29 1-2 269

செப்.30 3-6 152

அக்.1 7-10 153

அக்.2 11-14 193

அக்.3 15-22 290

அக்.4 23 21

அக்.5 24-31 261

அக்.6 32 14

அக்.7 33-37 275

அக்.8 38-42 216

அக்.9 43-49 221

அக்.10 50-55 221

அக்.11 56 34

அக்.12 57-62 324

அக்.13 63-64 68

அக்.14 65-68 109

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com