திருமலையில் 37,909 போ் வழிபாடு

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 37,909 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 19,603 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 37,909 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 19,603 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 15 ஆயிரம் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2,000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கரோனா தடுப்பு விதிமுறைப்படி திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை உடன் எடுத்து வரவேண்டும்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவலை கருத்தில் கொண்டு வரும் ஏப்.12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச சா்வ தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஏப்.11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா செல்லிடப்பேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com