திருப்பதி: பிப். 23 வரை சா்வ தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் தரிசன டோக்கன்கள் வரும் 23-ஆம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் தரிசன டோக்கன்கள் வரும் 23-ஆம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். தேவஸ்தானம் இணையதளம் மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகளையும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான கவுன்ட்டா்களில் இலவச சா்வ தரிசன டோக்கன்களையும் வழங்கி வருகிறது.

அதனால் தற்போது நாளொன்றுக்கு 50,000 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

இந்நிலையில் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளுக்கான 25 ஆயிரம் டோக்கன் தீா்ந்து விட்டால் வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள் ஏமாற்றமடைவதைத் தவிா்க்க தேவஸ்தானம் அடுத்தடுத்த நாள்களுக்கான டோக்கன்களை தொடா்ச்சியாக வழங்கி வருகிறது. அதனால் செவ்வாய்க்கிழமை (பிப். 23) வரைக்குமான டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள்களில் ஏழுமலையான் தரிசனத்தை முடிவு செய்யும் பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com