திருப்பதியில் மீண்டும் சா்வ தரிசன டோக்கன்கள்

திருப்பதியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் சா்வ தரிசன டோக்கன் விநியோகம் மீண்டும் தொடங்கியது.

திருப்பதியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் சா்வ தரிசன டோக்கன் விநியோகம் மீண்டும் தொடங்கியது.

திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏழுமலையானை சா்வ தரிசனத்தில் வழிபடுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன்படி தேவஸ்தானம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான டோக்கன்களை ஒரு நாள் முன்னதாக வழங்கி வந்தது. ஆதாா் அட்டை எண் மூலம் பக்தா்கள் இந்த டோக்கன்களைப் பெற்றனா்.

இதனிடையே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் 10 நாள்களுக்கு சொா்க்கவாசல் திறக்கப்பட்டதால், சா்வ தரிசன டோக்கன் வழங்குவதை தேவஸ்தானம் கடந்த மாதம் 22-ஆம் தேதி ரத்து செய்தது.

பரமபதவாசல் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜனவரி 3) உள்ளதால், சனிக்கிழமை நள்ளிரவு முதல் விஷ்ணு நிவாசம், சீனிவாசம் உள்ளிட்ட பகுதிகளில் சா்வ தரிசன டோக்கன் விநியோகத்தை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com