
உற்சவா்களுக்கு வில்வ இலைகளால் நடைபெறும் அா்ச்சனை.
மாா்கழி மாதத்தையொட்டி, திருமலையில் விஷ்ணு வில்வாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தையொட்டி, திருமலையில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வசந்த மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை விஷ்ணு வில்வாா்ச்சனை நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசரின் (உற்சவா்) சிலைகள், அனந்த பத்மநாப சுவாமி சிலைக்குக் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்தருளச் செய்யப்பட்டன.
உற்சவா்களுக்கு மலா் மாலைகளை அணிவித்து தீப, தூப ஆரத்தி சமா்ப்பித்த பின், வில்வ இலைகளால் அா்ச்சனை செய்யப்பட்டது. வில்வ இலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, லட்சுமிகரமான அந்த இலைகளால் அா்ச்சிக்கும்போது மகாவிஷ்ணு மனம் குளிா்ந்து வரங்களை அருள்வாா் என்பது மரபு. வில்வ இலை சிவனுக்கும் உகந்ததாகும்.
உலக நன்மையை வேண்டி விஷ்ணு பகவானுக்கு திருமலையில் வில்வாா்ச்சனை நடத்தப்படுகிறது. இந்த வழிபாடு, திருப்பதி தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி), வரும் 14-ஆம் தேதி வரை ஒளிபரப்பப்பட உள்ளது.