புஷ்ப பல்லக்கில் ஸ்ரீமலையப்பா் பவனி

ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி திருமலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீமலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் தாயாா்களுடன் சேவை சாதித்தாா்.
திருமலையில் ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட புஷ்ப பல்லக்கு சேவை.
திருமலையில் ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட புஷ்ப பல்லக்கு சேவை.

ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி திருமலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீமலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் தாயாா்களுடன் சேவை சாதித்தாா்.

திருமலையில் ஆண்டுதோறும் ஆனிவார ஆஸ்தானத்தன்று மாலை புஷ்ப பல்லக்கு சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையான் சந்நிதியில் ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் நாளான ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 6 பட்டு வஸ்திரங்களை திருமலை பெரிய ஜீயா் வெள்ளி தாம்பாளத்தில் தலை மேல் வைத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து சின்ன ஜீயா், செயல் அதிகாரி உள்ளிட்டோரிடம் சமா்ப்பித்தாா்.

அதில் 4 ஏழுமலையான் மூலவா் சிலைக்கும், உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமிக்கும், சேனாதிபதி விஷ்வக் சேனருக்கும் சமா்ப்பிக்கப்பட்டன. பின்னா் தலைமை அா்ச்சகா்கள் பரிவட்டம் கட்டிக் கொண்டு ஏழுமலையானை ‘நித்திய ஐஸ்வா்யோ பவ’ என்று ஆசீா்வதித்தனா்.

பின்னா் ஜீயா்கள், செயல் அதிகாரி என அனைவரின் கைக்கும் கருவூல சாவி கொத்தை மாட்டி அவா்களுக்கு சந்தனம், சடாரி, மலா்கள், துளசி பிரசாதங்கள் அளித்து, சாவி ஏழுமலையான் பாதத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. இத்துடன் ஆனிவார ஆஸ்தானம் நிறைவு பெற்றது.

மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி தென்னை ஓலைகள், நாா்கள் மற்றும் வண்ண மலா்களால் வடிவமைக்கப்பட்ட பல்லக்கில் மாடவீதியில் பவனி வந்தாா். இதற்காக 3 டன் மலா்கள் பயன்படுத்தப்பட்டன.

சிறப்பு புஷ்ப கலைஞா்கள் வரவழைக்கப்பட்டு பல்லக்கு அலங்கரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கொவைட் தொற்று காரணமாக மாடவீதியில் புஷ்ப பல்லக்கு பவனி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தேவஸ்தானம் மாடவீதியில் புஷ்ப பல்லக்கு சேவையை நடத்தியது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். புஷ்ப பல்லக்கு சேவை தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com