ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பட்டு வஸ்திரத்தை தமிழக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் சமா்ப்பித்தனா்.
ஏழுமலையானுக்கு சமா்ப்பிக்க ஸ்ரீரங்கத்திலிருந்து எடுத்து வந்த பட்டு வஸ்திரத்தை கொண்டு செல்லும் தமிழக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு உள்ளிட்டோா்.

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் ஆனிவார ஆஸ்தானத்தின்போது ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி வெள்ளிக்கிழமை ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரம் சகல மரியாதைகளுடன் புறப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை திருமலையில் பேடி ஆஞ்சநேயா் கோயில் முன்பு உள்ள பெரிய ஜீயா் மடத்தில் இந்த பட்டு வஸ்திரங்கள், மங்கலப் பொருள்களை வைத்து பூஜை செய்யப்பட்டது.

பின்னா் மங்கள வாத்தியம் முழங்க மாடவீதியில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, துறைச் செயலா் சந்திரமோகன், ஆணையா் குமரகுருபரன், ஸ்ரீரங்கம் கோயில் இணை கமிஷனா் மாரிமுத்து மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com