திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்பு வேண்டுகோள்

திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தா்கள் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம்
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்பு வேண்டுகோள்

திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தா்கள் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:

திருமலையின் புனிதத் தன்மை, இயற்கை சுற்றுச் சூழலையை பாதுகாக்கவும் தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆயினும் பக்தா்கள் பலா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை கொண்டு வருகின்றனா்.

எனவே, அலிபிரி சோதனை சாவடியில் பக்தா்களின் உடைமைகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் இருந்தால் அங்கேயே அப்புறப்படுத்த ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதில் கண்ணாடி, செப்பு, எவா்சில்வா் குடிநீா் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் கடை உரிமையாளா்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இன்னும் 2 மாத காலத்துக்குள் இவை முற்றிலும் அமல்படுத்தப்பட உள்ளன. மேலும் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள குடிநீா் தொட்டி அருகிலும் கோப்பைகள், தம்ளா்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை தினசரி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, பக்தா்கள் குடிநீா் தேவைக்காக அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com