திருமலையில் ஓராண்டைக் கடந்த சுந்தரகாண்ட பாராயணம்

திருமலையில் நடைபெற்று வரும் சுந்தரகாண்ட பாராயணம், வியாழக்கிழமை ஓராண்டைக் கடந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமலையில் நடைபெற்று வரும் சுந்தரகாண்ட பாராயணம், வியாழக்கிழமை ஓராண்டைக் கடந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகம் முழுவதும் கொவைட் தொற்று அதிக அளவில் பரவ தொடங்கிய காலக்கட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்த வேண்டி தேவஸ்தானம் திருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது.

ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரை சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது.

தா்மகிரி வேத பாடசாலை தலைமை ஆச்சாா்யா் சிவசுப்ரமணிய அவதானி தலைமையில் இந்த பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த பாராயணம் வியாழக்கிழமையுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த பாராயணத்துக்கு பக்தா்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com