இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்: வாரப் பலன்கள் (மார்ச் 12 - 18)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மார்ச் 12 - மார்ச் 18) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்: வாரப் பலன்கள் (மார்ச் 12 - 18)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மார்ச் 12 - மார்ச் 18) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். ஆனாலும் உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். அலுவலகப் பணிகள் அனைத்து வெற்றிகரமாக முடியும். வியாபாரிகளுக்கு அவசியமான செலவுகளுக்கும் கடன் வாங்க நேரிடும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சுமூகமான நிலைமை தென்படும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம். 

அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கட்சி மேலிடத்திடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகள் படிப்படியாக வெற்றியடையும். உங்களின் செயல்கள் மக்களைக் கவரும்.

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். பொருளாதார நிலையை சற்று சமாளிக்கும் படியான சூழல் உருவாகலாம். மாணவமணிகள் விரும்பிய பாடப்பிரிவுகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 12, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். முக்கியமான நவீன சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பேச்சில் கவனமாக இருக்கவும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிக்கும் நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் கவனமாக இருக்கவும். அலுவலக நண்பர்களிடத்தில் மனக்கசப்பு உருவாகும். 

மற்றபடி எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். வியாபாரிகள் நிலுவைத் தொகையை வசூலிப்பதில் கவனம் செலுத்தவும். கூட்டுத் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் செலவு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். 

அரசியல்வாதிகள் கவனமாக நடந்து கொள்ளவும். பேச்சினால் பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அநாவசியமான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். கலைத்துறையினர் சமயோஜிதமாக செயல்படவும். கவனக்குறைவால் புதிய ஒப்பந்தங்களை இழப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

பெண்மணிகள் எதையும் பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்கவும். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்னைகள் தோன்றி மறையும். மாணவமணிகள் சாதனைகளைச் செய்ய கவனத்தைச் சிதறவிடாமல் படிக்கவும்.  

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 12, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

விவேகத்துடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சற்று சீராக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களின் தேவைகளை மேலதிகாரிகள் நிறைவேற்றுவார்கள். சக ஊழியர்களால் வேலைப்பளு குறையும். வியாபாரிகள் தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் தானிய உற்பத்தியில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதிய நிலங்களை வாங்கும் முயற்சியில் தற்போது ஈடுபடுவது நல்லதல்ல.

அரசியல்வாதிகள் தலைமையிடத்தில் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிறிது மனஸ்தாபங்கள் உற்றார் உறவினர்களுடன் ஏற்பட்டாலும் அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியர் ஒத்துழைப்புடன் அனைத்து செயல்களிலும் ஈடுபடுங்கள். 

பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 13, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் கெüரவத்திற்கும், புகழுக்கும் எந்தப் பங்கமும் ஏற்படாது. வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள். உடல் பிரச்னைகள் சற்று குறையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. வியாபாரிகள் வியாபாரத்தை சற்று விரிவுபடுத்தினால் மேலும் பல நன்மைகளை அடையலாம். கூட்டு வியாபாரம் தேவைப்படாது. விவசாயிகளுக்கு பயிரில் புழு, பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். விளைச்சல் அமோகமாக இருக்கும். 

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் நல்ல விதமாகப் பழகி அவர்கள் உதவியைப் பெறவும். கலைத்துறையினர் வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவதைச் சற்று தள்ளி வைக்கவும்.

பெண்மணிகளுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எவரிடமும் முன் கூட்டியே எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகளை பெற்றோர்கள் நிறைவேற்றுவார்கள். முயற்சிக்கேற்ப கல்வியில் முன்னேறுவார்கள்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம். 

அனுகூலமான  தினங்கள்: 14, 15. 

சந்திராஷ்டமம்: 12, 13.

•••••

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நீங்கள் வியக்கும் வகையில் நடந்தேறும். உற்றார், உறவினர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் மிடுக்கு ஏற்படும். பொருளாதார நிலைமை சீராகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். வேலையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வியாபாரிகள் தேவைக்கு ஏற்ப பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். பண வரவு சீராக இருக்கும். விவசாயிகளுக்கு வாய்க்கால், வரப்பு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்வீர்கள். தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் விருப்பதிற்கேற்ப செயல்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகள் கணவர் வீட்டாருடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் உயர்வான மதிப்பெண்கள் கிடைக்கும். நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 13, 16. 

சந்திராஷ்டமம்: 14, 15.

•••••

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சமுதாய நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தத்துவம், இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். உங்கள் முயற்சிகளை நண்பர்கள் பாராட்டுவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் இருந்து, கொடுத்த பணிகளை உடனுக்குடன் முடிக்கப் பாருங்கள். பணப் பற்றாக்குறை இருக்காது. 

வியாபாரிகள் கவனக்குறைவு இல்லாதிருந்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். சுறுசுறுப்புடன் வியாபாரம் செய்யுங்கள். விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் தங்களது முயற்சிகள் வெற்றி பெற சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும். பிரசாரத்தில் ஈடுபடும் போது வார்த்தைகளில் கவனம் வையுங்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகள் கணவரின் ஆலோசனைகளை மீறாதீர்கள். அனுசரித்து நடந்து கொண்டு உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்வது நல்லது. 

பரிகாரம்: திருவேங்கடநாதனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 12, 15. 

சந்திராஷ்டமம்: 16, 17, 18.

•••••

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேரும். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்களின் முயற்சிகள் சரியான இலக்கை அடையும். சிலர் புனித யாத்திரை மேற்கொண்டு மகிழ்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவால் வேலைப் பளு குறையும். 

வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.கூட்டாளிகள் உங்களுக்கு உதவுவார்கள். விவசாயிகள் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். அதிகம் உழைக்க வேண்டி வரும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு அமோகமாகவே இருக்கும். நிறைய இடங்களில் பிரசாரம் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களையும், தயாரிப்பாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். செலவுகள் அதிகரித்து சேமிப்புகள் குறையும். மாணவமணிகள் படிப்பில் போதிய அக்கறை காட்டவும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

பரிகாரம்: குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுங்கள். சகோதர, சகோதரிகள் தேடி வந்து உதவி செய்வார்கள். வாகனப் பயணங்களின்போது கவனமாக இருக்கவும். பழைய கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் கவனமாகப் பழகவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும்.விவசாயிகளுக்கு பயிர்களுக்கான நீர்வரத்து நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளால் திருப்தி அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் உதவியால் அனைத்து சாதனைகளையும் புரிவீர்கள். மேலிடத்திலிருந்து பாராட்டு கிட்டும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவ முன்வர மாட்டார்கள். சுய முயற்சியால் உழைத்து முன்னேறுவீர்கள். 

பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடப்பதினால் இல்லத்தில் குழப்பமில்லாமல் இருக்கலாம். இதனால் பல இன்னல்களையும் தவிர்த்திடலாம். மாணவமணிகள் கல்வியில் போதிய அக்கறை காட்டவும்.  சக மாணாக்கர்களிடம் ஆலோசனைகளையும் கேட்டுக் கொள்ளவும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான  தினங்கள்: 14, 18.

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

புதிய திட்டங்களால் பயனடைவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணப்பிரச்னை எதுவும் ஏற்படாது. உடன் பணி புரியும் ஊழியர்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் பல பிரச்னைகள் உருவாகலாம். தனித்தே செயல்படவும். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயிப்பீர்கள். நல்ல வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதற்கே சிறிது தாமதம் ஆகும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வதற்கு சரியாக நேரங்களை ஒதுக்கவும். 

பெண்மணிகள் வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது மிகுந்த பாதுகாப்புடன் பேசவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு சீராகவே இருக்கும். வெளி விளையாட்டுகளில் தைரியமாக ஈடுபடலாம். 

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சுபச் செலவுகளைச் செய்வீர்கள். வெளிநாட்டிலிருந்து இனிமையான செய்திகளைக் கேட்பீர்கள். செய்தொழிலில் மந்த நிலை காணப்படும். அதனால் உங்கள் வேலைகளைத் தவிர வேறு எதையும் கண்டுகொள்ள வேண்டாம்.  

உத்தியோகஸ்தர்கள் நலனில் மேலதிகாரிகள் அக்கறை செலுத்துவார்கள். எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி, முக்கியப் பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.  விவசாயிகளுக்கு கால்நடைகளால் நல்ல லாபம் உண்டாகும். கொள்முதல் லாபம் சீராக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு புதுப்புது பொறுப்புகள் வந்து சேரும். தொண்டர்களின் உதவியுடன் அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பீர்கள். பழைய ஒப்பந்தங்களை முடிக்கப் பாடுபடுவீர்கள். 

பெண்மணிகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இல்லத்தில் நிலவும் நிம்மதியான சூழ்நிலையால் திருப்தி அடைவீர்கள். மாணவமணிகள்கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான  தினங்கள்: 12, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு பயணம் மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். உங்களின் பேச்சினால் மற்றவர்களைக் கவர்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடமிருந்து ஒதுங்கி நின்று செயலாற்றவும். வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரிகள் தற்போது புதிய கடையைத் திறப்பதைத் தள்ளிப் போடவும். கொடுக்கல், வாங்கலில் எந்தக் குறையும் ஏற்படாது. விவசாயிகள் சிலருக்கு பால் வியாபாரம் நன்றாக நடக்கும். விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பதில் சிரமப்படுவீர்கள். 

கணவரின் அன்புக்கும், அரவணைப்புக்கும் பாத்திரமாவீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு சீராகவே இருக்கும். 

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 12, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றிபெறும். குழந்தைகளை நல்வழிப்படுத்துவீர்கள். கடன் வாங்கி வீடு, மனை வாங்குவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். ஊழியர்களின் ஆதரவால் வேலைப் பளு குறையும்.  வியாபாரிகள் நண்பர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள். சிறிய முதலீட்டில் புதிய கடையைத் திறக்கும் எண்ணம் மேலோங்கும். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.  புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். புதுப்புது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். 

பெண்மணிகள் பெரியோர்களைச் சந்தித்து ஆன்மிக பலம் பெறுவீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மழலையின் வருகையால் மன மகிழ்ச்சி கொள்வீர்கள். மாணவமணிகள் வெளி விஷயங்களில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளவும். படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 17, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com