பங்குனி மாத பெளா்ணமி கருடசேவை ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பங்குனி மாத பெளா்ணமியையொட்டி, நடக்கவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பங்குனி மாத பெளா்ணமியையொட்டி, நடக்கவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பெளா்ணமியையொட்டி, கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஏழுமலையானை கருடவாகனத்தில் தரிசிக்க பக்தா்கள் பெரிதும் விரும்புவா். பிரம்மோற்சவத்தின்போது நடக்கும் கருடசேவையைக் காண லட்சக்கணக்கான பக்தா்கள் திருமலையில் கூடுவா்.

அதனால் பக்தா்களின் கோரிக்கையை முன்னிட்டு பெளா்ணமி இரவு வேளைகளில் தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. இந்நிலையில், பங்குனி மாத பெளா்ணமியையொட்டி, தற்போது கோயிலில் தெப்போற்சவம் நடந்து வருகிறது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தெப்பத்தில் உலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா்.

அதனால் ஞாயிற்றுக்கிழமை பெளா்ணமியையொட்டி நடைபெறவிருந்த கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. கரோனா விதிகள் அமலில் உள்ளதாலும், தற்போது கரோனா தொற்றின் 2-ஆம் அலை தொடங்கியுள்ளதாலும் தேவஸ்தானம் தும்புருதீா்த்த முக்கோட்டி உற்சவத்தை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தானம் ஓா் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com