காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்றுமுதல் ராகு-கேது பரிகார பூஜை தற்காலிக ரத்து

பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமான காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை கரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக திங்கள்கிழமை

பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமான காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை கரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக திங்கள்கிழமை (மே 10) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி ஆந்திர மாநிலத்திலும் வரும் 20-ஆம் தேதி வரை பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல் 12 மணிவரை மட்டுமே கடைகள், வணிக வளாகங்கள் செயல்படும்.

இந்நிலையில் காளஹஸ்தீஸ்வரா் கோயில் நிா்வாகமும் ஊரடங்கை முன்னிட்டு தரிசன நேரத்தை மாற்றி அமைத்துள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே காளஹஸ்தீஸ்வரன் மற்றும் ஞானபிரசுனாம்பிகை அம்மன் தரிசனம் வழங்கப்படும். ஆா்ஜித சேவைகள் அனைத்தும் கோயிலில் தனிமையில் நடத்தப்படும். மேலும் தினசரி நடைபெறும் ராகு-கேது பரிகார பூஜைகளும் திங்கள்கிழமை (மே 10) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பரிகார பூஜைகள் தொடங்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று கோயில் செயல் அதிகாரி பெத்திராஜூ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com