பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா

பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, உலக நன்மைவேண்டி வழிபாடு நடைபெற்றது.
பந்தல்குடி அருகே ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை நண்பகலில் நடைபெற்ற 4ம் ஆண்டு  வருஷாபிஷேக விழாவில் பலவண்ண மலரலங்காரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா.
பந்தல்குடி அருகே ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை நண்பகலில் நடைபெற்ற 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் பலவண்ண மலரலங்காரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா.

அருப்புக்கோட்டை: பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, உலக நன்மைவேண்டி வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  பந்தல்குடி அருகே ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை நண்பகலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு ஆகியன  நடைபெற்றன.

பந்தல்குடி அருகே செட்டிப்பட்டி அன்பு மாடல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா  சனிக்கிழமை நண்பகலில் நடைபெற்றது.

முன்னதாக காலை 8.30 மணிக்குத் தொடங்கிய சிறப்பு வேள்வியில், ஸ்ரீவிக்னேஸ்வர பூஜையில் தொடங்கி லஷ்மி கணபதி யாகம், 108 சங்கு தீர்த்த அபிஷேகம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு வேள்வி பூஜைகளும், நிறைவாக குடமுழுக்கும், ஸ்ரீசீரடி சாய்பாபா உற்சவர் மற்றும் விக்கிரக அபிஷேகமும் நடைபெற்றன.

அதையடுத்து பாபா பக்திப்பாடல் இசையுடன் தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. உலக நன்மை வேண்டியும், மக்களை நோய்த்தொற்றிலிருந்து காக்கவும், பொருளாதாரம் ஓங்கிடவும் 108 நாமாவளி அர்ச்சனையும், தியானமும் நடைபெற்றன.

நடன ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் அவரது மாணவி ஆகியோர் பாரம்பரிய நடனம் ஆடி விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 

விழா ஏற்பாடுகளை கோயிலின் தலைமை  நிர்வாகியும் 5 ஸ்டார் நீச்சல் குளம் உரிமையாளருமான மனிதத்தேனீ டாக்டர் வி.சுந்தரமூர்த்தி மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com