அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரப்போகுது இந்த ராசிக்கு (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரப்போகுது இந்த ராசிக்கு (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். இனம் புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன் மனைவியுடன் புரிதல் வேண்டும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றங்கள் உருவாகும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரிகளுக்கு  வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுத்து செல்லும் பொருள்களில் கூடுதல் கவனம் வேண்டும். விவசாயிகள்  சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். 
அரசியல்வாதிகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். 

திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு  வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். சக கலைஞர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு கூடும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவமணிகள்  விடாப்பிடியாக படித்து தேர்வுக்கு தயாராவீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளை கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. வெளி அரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள்.

பரிகாரம்:  ஸ்ரீ துர்க்கை, விநாயகர் வழிபாடு உகந்தது. அனுகூலமான தினங்கள்:  15, 16. சந்திராஷ்டமம்:  19, 20


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பேச்சுகளில் நிதானம் வேண்டும். உறவினரிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும் நண்பர்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டாலும் அனுசரித்து நடப்பது நல்லது.  

உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் 
சிந்தித்து செயல்படவும். விவசாயிகள்  இழுபறியான பணிகளை முடித்து, எண்ணங்களில் சோர்வு நீங்கி புதுப்பொலிவுடன் இருப்பீர்கள். கால்நடைகளால் நல்ல பலன் 
காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு  வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு  உடன் பிறப்புகள், ரசிகர்கள், சக கலைஞர்களால் உதவிகள், ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் காலமிது. பெண்மணிகளுக்கு  உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். திறமைகள் கூடும். மாணவமணி கள்  மனதிற்குப் பிடித்த பாடப்பிரிவில் சேர்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது. அனுகூலமான தினங்கள்:}  16, 17. சந்திராஷ்டமம்: 21.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) 

அதிர்ஷ்ட வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரம் மேம்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள். செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். 

உத்யோகஸ்தர்கள்  அலுவலகத்தில்  அனைவரும் மதிக்கத்தக்கவராக வலம் வருவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வியாபாரம் பெருமளவில் வளர்ச்சியடையும். வாராக்கடனும் வசூலாகும். விவசாயிகளுக்கு சந்தையில் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைத்து மிகுந்த லாபமடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

அரசியல்வாதிகள்  உடல் சோர்வைப் பொருள்படுத்தாது உழைப்பீர்கள். அதனால் புதிய கெüரவம், பதவி, அந்தஸ்து கிடைக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் பெருமைகள் கூடும். மாணவமணிகளின் கோரிக்கைகளை பெற்றோர்கள் நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடற்பயிற்சியை தவறாது செய்யுங்கள்.

பரிகாரம்: ராகு காலத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு உத்தமம். அனுகூலமான தினங்கள்: 15, 17. சந்திராஷ்டமம்:  இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

புத்தி சாதுர்யத்துடன் கடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். உற்றார், உறவினர்களுடன் இணக்கமாக இருப்பீர்கள். இல்லத்தில் தட்டிச் சென்ற சுபநிகழ்ச்சிகள் தற்போது நடைபெற வாய்ப்பு வரும். 

உத்தியோகஸ்தர்களின்  உழைப்பிற்கு பலன் இருமடங்காகும். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகள்  மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். பிரச்னைகள் தீர்வு பெறும். விவசாயிகள்  பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். புதிய குத்தகைகளையும் பெறுவீர்கள். கொள்முதல் லாபங்கள் சிறப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகள்  புதுப்புது தொண்டர்களைக் கட்சியில் சேர்ப்பீர்கள். மக்கள் நலப்பணியில் இறங்கி கவனத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு  புகழும், கெüரவமும் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும்.பெண்மணிகள்  இறைவழிபாட்டில் மனதை செலுத்தி அமைதி காணுங்கள். குடும்பத்தில் ஏற்பாடாகும் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். 

மாணவமணிகள்  கவனமாக படித்துச் சாதனை செய்வீர்கள். சக மாணவர்கள் மத்தியில் சாதிக்கும் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்:  ஐயப்பனை வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 17, 18. சந்திராஷ்டமம்:  இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

நல்ல செய்தியுடன் திருப்பமும் வரும். குடும்ப அமைதி நீடிக்கும். குடும்பத்திலிருந்து விலகியிருந்த உறவினர்கள் தவறை உணர்ந்து தாங்களே ஒதுங்கிக் கொள்வார்கள். பூர்வீகச் சொத்துகளிலிருந்த  பிரச்னைகளை உணர்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சிலர் வெளியூருக்கு மாற்றலாகி விடுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு  கொடுக்கல், வாங்கல்கள் சிறப்பான பலனைக் கொடுக்கும். உங்கள் எண்ணங்கள் உங்கள் செயல்களில் இடம் பிடிக்கும். விவசாயிகளில் பால் வியாபாரம் செய்பவர்கள் நலமடைவார்கள். தானிய உற்பத்தி பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்  எதிரிகளின் மீது கண் வைப்பதோடு கவனத்துடன் பழகவும். எதிர்பார்க்கும் காரியங்களில் பலன் கிடைக்கும். கலைத்துறையினர் ரசிகர்களைக் கெüரவப்படுத்துவீர்கள். திறமையினால் தகுந்த அங்கீகாரமும், மதிப்பும் பெறுவீர்கள். 

பெண்மணிகள்  தெய்வ பலத்தை பெருக்கிக் கொண்டால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். உறவினர்களால் சற்று ஒற்றுமையும், எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கும். மாணவமணிகள்  பெற்றோரின் வார்த்தையின்படி நடந்து கொள்வது நல்லது. படிப்பில் கவனம் சிதறாமல் இருந்து மதிப்பெண்களை அள்ளுங்கள்.

பரிகாரம்:  ஸ்ரீ ஹயக்கிரீவரை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்:  17, 19. சந்திராஷ்டமம்:  இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். புத்தி சாதுர்யத்துடன் சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தர்ம சிந்தனைகள் சமுதாயத்தில் உங்களுக்கு புதிய கெüரவத்தையும், அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உழைப்பிற்கு இரட்டிப்பு உயர்வு கிடைக்கும். வியாபாரிகள்  மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். திட்டமிட்ட வேலைகளை உடனே செயல்படுத்துங்கள். விவசாயிகள்  கொள்முதல் லாபங்களால் புதிய குத்தகைகளையும், பாசன வசதிகளையும் பெருக்கிக்கொள்வீர்கள். விளைச்சல் நன்றாகவே இருக்கும்.

அரசியல்வாதிகள்  புதிய தொண்டர்களைக் கட்சியில் சேர்ப்பீர்கள். புகழ், செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு  நண்பர்களால் தக்க சமயத்தில் உதவிகள் வந்து சேரும். பண வரவில் படிப்படியான உயர்வினைக் காண்பீர்கள்.

பெண்மணிகள்  மனதில் காரணமில்லாத குழப்பங்கள் நிலவும். மனதை ஆன்மிகத்திலும், இறைவழிபாட்டிலும் செலுத்துங்கள். மாணவமணிகள்  கடுமையாக உழைத்துப் படித்து, மாநில அளவில் சாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். மதிப்பெண்கள் உயர கடினமாக உழைத்து பெயர் எடுக்கவும்.

பரிகாரம்: பார்த்தசாரதி பெருமாளை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 16, 19. சந்திராஷ்டமம்:  இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். யாரையும் அலட்சியம் செய்து ஒதுக்காமல் அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள். செய்தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்  புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் அன்பு பரஸ்பரம் பேணுங்கள். வியாபாரிகள் எதிலும் நேரிடையான நேர்மையான உழைப்பை மூலதனமாக்குங்கள். நன்கு ஆலோசித்த பிறகு புதிய முதலீட்டில் ஈடுபடவும். விவசாயிகள்  மகசூல் லாபம் அதிகரிக்க கடும் போட்டிகள், அயராத உழைப்பைச் சந்திப்பீர்கள். கூலி விவசாயிகளிடம் இன்முகத்தோடு பழகுங்கள்.

அரசியல்வாதிகள் கட்சி  மேலிடத்தின் ஆணைப்படி நடந்துகொள்ளுங்கள். தொண்டர்களை அன்புடன் அரவணைத்து வழி நடத்துங்கள். கலைத்துறையினருக்கு  பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆதலால் சேமிப்பிலிருந்தே செலவழிப்பீர்கள். 

பெண்மணிகள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். இல்லத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். மாணவமணிகள் உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடவும். அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்:  ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 15, 19. சந்திராஷ்டமம்:  இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

புதிய நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் சில கலகங்களைச் சந்தித்தாலும் நிம்மதி குறையாது. சுபச் செய்திகளில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் நம்பிக்கைகள் துளிர்விடும். கோரிக்கைகள் நிறைவேறும். 

உத்தியோகஸ்தர்கள்  சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரிகள்  வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது முறைகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள்  புதிய நிலங்களை வாங்க முயற்சிமேற்கொள்வதற்குரிய காலமிது. அமோகமான விளைச்சல் லாபம் ஏற்பட்டு பழைய கடனை அடைத்துவிடும் சூழ்நிலை உருவாகும்.

அரசியல்வாதிகளுக்கு  தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இருப்பினும் மேலிடத்தின் பார்வையைச் சுண்டி இழுப்பீர்கள். கலைத்துறையினருக்கு  பெயரும், புகழும், திறமையும் மிளிரும். எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் உங்களுக்குச் சாதகமாகும். 

பெண்மணிகளுக்கு  மனதிற்கினிய செய்திகளால் மனம் மகிழ்ச்சியடையும். கணவருடனான அன்பும், பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள்  யாரிடமும் ஆவேசத்துடன் பேசாமல் நிதானத்துடன் அன்பாகப் பேசவும். சக மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்து பழகுங்கள்.

பரிகாரம்: சூரசம்ஹார மூர்த்தியை வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 16, 20. சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மனதிலும் உடலிலும் சோர்வு அதிகமாக இருந்தாலும் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நட்பு வட்டாரங்களில் அதிக கவனம் தேவை. உடல் நிலையைப் பேணுவது அவசியம். பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்க பழகுங்கள்.

உத்யோகஸ்தர்கள் அலுவலக கெடுபிடிகளாலும், வேலைப் பளுவினாலும் சோர்ந்து போயிருப்பீர்கள். நேரம் தவறி உண்பது, உறங்குவதால் சற்று உடல்நிலை பாதிக்கும். வியாபாரிகள்  கூட்டு வியாபாரம், ஜாமீன் கையொப்பம் போடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில்  அதிக லாபமடைவீர்கள். விவசாயிகளுக்கு  கால்நடை பராமரிப்புகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். ஆனாலும், மகசூல் லாபம் அதிகரிப்பால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். தொண்டர்களுக்கிடையே சண்டை சச்சரவுகள் செய்து எதிர்க்கட்சியினர் சந்தோஷமடைவார்கள். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். விருதும், பாராட்டுதல்களும் நெருங்கி வரும். 

பெண்மணிகள்  கணவரையும், அவரது குடும்பத்தினரையும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைப் பேணுங்கள். மாணவமணிகளின் சிறிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை மேற்கொள்ளுங்கள்.

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 18, 21. சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் முயற்சிகளால் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சாதகமாகும். சமூகத்தில்  உயர்ந்தவர்களால் சில உதவிகள் கிடைக்கும். துணிந்து செய்யும் வேலைகளில் மிகுந்த தன்னம்பிக்கையும், பொறுமையும் அவசியம். 

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பினால் காரிய அனுகூலமடைவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை திறம்பட நடத்த கடும் பிரச்னைகள் குறுக்கிடும். சக வேலையாட்களின் மிகுந்த ஒத்துழைப்பினால் வியாபாரம் வளர்ச்சியடையும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்வீர்கள். குத்தகை நிலங்களால் சற்று கடன் வாங்க நேரிடும்.

அரசியல்வாதிகள் பயணங்களைத் தள்ளிப் போடவும். ஏனெனில் கட்சி மேலிடத்தில் சற்று அனுகூலமான சூழ்நிலை இராது. கலைத்துறையினருக்கு  வாய்ப்புகள் கடும் போட்டிகளுக்குப் பிறகே கையொப்பத்திற்கு வரும். தவறாது பயன்படுத்தி திறமையை வெளிக்கொணருங்கள். பெண்மணிகள் வார்த்தையை அளந்து பேசுங்கள். 

கணவர் வீட்டாரின் அன்பும் ஆதரவும் பெருகும். மாணவமணிகள் காலத்தை வீணடிக்காமல் பாடங்களில் மனதை செலுத்தி தேர்வுக்குத் தயாராகுங்கள். 

பரிகாரம்: பெருமாள் தாயாரை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 18, 19. சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த பலன்கள் பல கடினமான முயற்சியின் பேரில் கிடைக்கும். அறிவும், துணிச்சலும் கூடும். இளைய சகோதரரால் ஆதரவு கிடைக்கும். முன்கோபத்தை விட்டொழித்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுங்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சுமை அதிகரிக்கும். உடல்நிலையும் ஒத்துழைக்காது. எதிலும் கவனம் தேவை. வியாபாரிகள் எதிலும் அகலக்கால் வைக்காமல் இருப்பதைக் கொண்டு வியாபாரத்தை நடத்துங்கள். கூட்டாளிகளினால் தொந்தரவு நேரும். 

விவசாயிகள் கால்நடைகளால் பல இழப்புகளைச் சந்திப்பீர்கள். இருப்பினும் பழைய பாக்கிகளை அடைத்துவிடுவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்திடம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு செய்வதறியாது மனக்குழப்பத்திலிருப்பீர்கள். எதிர்க்கட்சியினராலும் கலகங்கள் உருவாகும். கலைத்துறையினருக்கு  சக கலைஞர்களின் உதவியினால் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் சற்று உயரும். 

பெண்மணிகளுக்கு நண்பர்களால் சில ஆதாயம் தேடிவரும். இல்லத்தில் மழலையின் வரவால் மகிழ்ச்சி ஏற்படும். மாணவமணிகள் பெற்றோர்களது அறிவுரைகளை மதித்து நடந்துகொள்ளுங்கள். யோகா, பிராணாயாமம் தவறாது மேற்கொள்ளுங்கள்.

பரிகாரம்: விநாயகர், துர்க்கையையும் வழிபடுங்கள். அனுகூலமான தினங்கள்: 20, 21. சந்திராஷ்டமம்: 15, 16.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார சுபிட்சத்தை எட்டுவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாற்றம் செய்வார்கள். பழைய விவகாரங்களை மறந்துவிடுவது நல்லது. தெரியாமல் செய்த பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கெüரவம் உயரும். உங்கள் கடமையை நீங்கள் சரிவர ஆற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் வெளிப்படைத்தன்மை இருப்பது அவசியம். வியாபாரத்தை மேலும் விரிவடையச் செய்வீர்கள். விவசாயிகள்  விவசாயத்தை நவீன மயமாக்குவீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனத்துடன் பழகுங்கள். மேலிடத்தின் பாராட்டையும் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமை சமுதாயத்தில் போற்றப்படும். தேசிய விருதுகளுக்காக உங்களது பெயர் பரிந்துரைக்கப்படும். பெண்மணிகள் வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். 

கணவர் வீட்டாரின் மிகுந்த ஒத்துழைப்பினால் சகல காரியங்களையும் சுலபமாக முடிப்பீர்கள். மாணவமணிகள் திறமையாகப் படித்து, எதிர்பார்த்திருந்த மேற்படிப்பிற்காக தீவிரமாக உழைப்பீர்கள்.

பரிகாரம்: சிவன், பார்வதியை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 15, 21. சந்திராஷ்டமம்: 17, 18.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com