தனுசு ராசியினர் இந்த விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும்: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
தனுசு ராசியினர் இந்த விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும்: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதாரத்தில் நிறைவைக் காண்பீர்கள். குடும்பத்தினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும்.  

வியாபாரிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.  விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் குறிப்பிட்ட இலக்குகளை எட்டிவிடலாம். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு செலவழிக்க நேரிடும்.  

பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். மாணவர்கள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவர்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

மன நிம்மதிக்காக அமைதியான இடங்களைத் தேடிச் செல்வீர்கள். கடன் பாக்கி வசூலாகும். சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். 

வியாபாரிகள் கடன்களை வாங்கி, வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் பிறரிடம் ஆதரவைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைச் சுலபமாகச் செய்து முடிப்பார்கள். 

கலைத்துறையினர் புகழ் பெறுவார்கள்.  பெண்கள் பிறரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். மாணவர்களின் எண்ணம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தவறான முடிவுகளைத் திருத்திக் கொள்வீர்கள். புத்திசாலித்தனம், திறமைகள் கூடும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சமாளிப்பீர்கள்.  வியாபாரிகள் பிறருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். 

விவசாயிகள் புதிய குத்தகைகளில் வருமானத்தைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் சமூக பிரச்னைகளில் தீர்வு காண முயற்சிப்பார்கள். கலைத்துறையினர் தங்கள் வாரிசுகளையும் ஈடுபடுத்த முயற்சிப்பார்கள். 

பெண்கள் குடும்பத்தில் மழலைகள் பிறக்கக் காண்பார்கள். மாணவர்கள் திறமையுடன் புதிய பயிற்சிகளைக் கற்றுக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள். 

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் ஸ்திரத் தன்மையைக் காண்பார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் அரசு உயரதிகாரிகளின் நட்பைப் பெறுவார்கள். 

கலைத்துறையினர் புதிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். பெண்கள் குழந்தைகளால் குடும்பப் பெருமை உயரக் காண்பார்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி நிறையும். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். செய்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்ர்களுக்கு சக ஊழியர்களுடன் உறவு சிறிது பாதிக்கப்படலாம். 

வியாபாரிகள் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவார்கள். விவசாயிகளுக்கு கடன்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் உத்வேகத்துடன் மேலிடத்தை அணுகுவார்கள்.

கலைத்துறையினர் புதிய முயற்சிகளைப் புகுத்துவார்கள். பெண்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். மாணவர்கள் எவரிடமும் விரோதம் பாராட்ட வேண்டாம்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். அலைச்சல் உண்டாகும். பயணங்களை கவனத்துடன் மேற்கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் கவனத்துடன் பணிகளை முடிப்பார்கள். 

வியாபாரிகள் நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகளுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகும். அரசியல்வாதிகள் திட்டமிட்டு புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவார்கள். 

கலைத்துறையினர் அந்தஸ்து உயரும். பெண்கள் கணவர் குடும்பத்தாருடன் இணைக்கமாகப் பழகுவார்கள். மாணவர்கள் பெற்றோரின் சுமையில் பங்கேற்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள். சுப காரியங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். 

விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குச் செலவழிக்க நேரிடும். அரசியல்வாதிகள் தொண்டர்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைப்பார்கள். கலைத்துறையினர் தங்களது செயல்களை மாற்றியமைப்பார்கள். 

பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். மாணவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - 19,20,21.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எதிர்காலத் திட்டங்களை மறுமதிப்பீடு செய்துகொள்வீர்கள்.  நல்ல முறையில் முதலீடு செய்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பாடங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகள் தங்களது ஆணவத்தைக் குறைத்துக் கொண்டு, சகஜமாகப் பழகுவார்கள். 

விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிப்பார்கள். அரசியல்வாதிகள் சரியான முடிவை எடுப்பார்கள். கலைத்துறையினர் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணருவார்கள். 

பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் பகுதி நேரப் படிப்புகளில் சேருவார்கள்.

சந்திராஷ்டமம்} 22,23.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தினரிடையே இருக்கும் மனக் கசப்புகளைத் தீர்த்துவைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பேசும்போது, கவனத்துடன் இருக்கவும். வியாபாரிகளை கூட்டாளிகள் காயப்படுத்தினாலும், பெரிதுபடுத்த வேண்டாம்.

விவசாயிகள் புதிய குத்தகை பாக்கிகளை வசூலிப்பார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் பேச்சுகளால், திசை மாறக் கூடாது. 

கலைத்துறையினரின் புதிய எண்ணங்கள் ஈடேறும். பெண்கள் பெற்றோருக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள். மாணவர்கள் பாடங்களை அன்றே படித்து முடிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - 24,25.


மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

முன்கோபத்தைக்  குறைத்துக் கொண்டு செயலாற்றுவீர்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள்.  குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடுதலாகும். 

வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடுவார்கள். விவசாயிகள் பழைய குத்தகைகளைச் சரியாக முடித்து கொடுப்பார்கள்.  அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும்.  

கலைத்துறையினர் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.  பெண்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலழிப்பார்கள். மாணவர்கள் தவறான சகவாசத்தை வெட்டிவிடவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.


கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

செயல்களுக்கான திட்டங்களை முறைப்படுத்துவீர்கள்.  போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் பழைய அனுபவம் கை கொடுக்கும்.  

வியாபாரிகள் தனித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். விவசாயிகள் புதிய நிலம் வாங்க முன்பணம் கொடுப்பார்கள்.  அரசியல்வாதிகள் கட்சியில் உயர்பொறுப்புகளில் இருப்போரைச் சந்தித்துப் பேசுவார்கள். 

பெண்கள் குடும்பத்தில் பாராட்டுகளைப் பெறுவார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடல் ஆரோக்கியத்தைப் பேண ஆகார விஷயங்களில் கவனத்துடன் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம்.   வியாபாரிகள் 

எதிர்பார்க்கும்படி முடிவு கிடைப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டிவரும். விவசாயிகள் அரசு நிலங்களை விளைச்சல் பூமியாக மாற்றுவார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் 

வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.  பெண்கள் தங்களது பிரச்னைகளை பேசித் தீர்த்துகொள்வார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com