வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

உத்தராயணம், தட்சிணாயணம் என இரு அயணங்கள் நமது வழக்கில் உள்ளன. உத்தராயணம் தேவர்களின் பகல் பொழுதாகவும், தட்சிணாயணம் இரவுப் பொழுதாகவும் கணக்கிடப்படும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள ஆறுமாத காலம் உத்தராயணம் எனவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய உள்ள ஆறுமாத காலம் தட்சிணாயனம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

நமது ஒரு வருட காலம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். உத்தராயணம் தை மாத துவக்கம் என்பதால், அதற்கு முதல் மாதமான மார்கழி மாதம் தேவர்களின் "பிரம்ம முகூர்த்த நேரம்' எனப்படும் தேவர்களின் அதிகாலைப் பொழுதில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசையோடு தாளம் சேர்த்து இசைப்பது விரும்பிய பலன் தரும். அதனால் இவ்விழா பொதுவாக மார்கழி மாதம் துவங்கி கொண்டாடப்படும்.

21 நாள்கள் நடைபெறும் இந்த அத்யயன உற்சவத்தில் ஏகாதசிக்கு முன்பு வரும் வளர்பிறை முதல் நாள் தொடங்கி, முதல் 10 நாள்கள் 'பகல்பத்து' என்றும், ஏகாதசி திதி முதல் தேய்பிறை பஞ்சமி வரையுள்ள 10 நாள்கள் "இராப்பத்து' எனவும்கொண்டாடப்படுகிறது .

இதேபோல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. சமூக இடைவெளி கடைப்பிடித்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், சுவாசம் தொடா்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவா்கள், கா்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோா்கள் உடல் நலன் கருதி தரிசனத்திற்கு வருவதை தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com