ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 5 நாள்களுக்கு அனுமதி

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் ஜூலை 30 வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
சதுரகிரி சுந்தர மகாலிங்கம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம்

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் ஜூலை 30 வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இக்கோயிலில் ஒவ்வொரு பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

இந்நிலையில் ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

பக்தர்கள் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com