நவம்பர் மாதப் பலன்கள் (மேஷம் - கன்னி)

நவம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை)
நவம்பர் மாதப் பலன்கள் (மேஷம் - கன்னி)

நவம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சனி, சந்திரன் - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

09-11-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

13-11-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-11-2022 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

பிறர் குற்றங்களை எளிதில் மன்னிக்கும் குணமுடைய மேஷ ராசிக்காரர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். மனதில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். முக்கியமான பணிகள் துரிதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிøடேய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

பெண்களுக்கு:முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.

அரசியல்வாதிகள் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். உங்கள் கட்சி பிரச்சனைகள் குடும்ப சந்தோஷத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அசுபதி:

இந்த மாதம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள்.

பரணி:

இந்த மாதம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

கார்த்திகை - 1:

இந்த மாதம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

****************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி, சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

09-11-2022 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

13-11-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-11-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

தனது நேர்மையான உணர்வுகளால் வாழ்வில் வெற்றி பெறும் ரிஷப ராசிக்காரர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது.

அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும்.

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

கார்த்திகை - 2, 3, 4:

இந்த மாதம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.

ரோகினி:

இந்த மாதம் தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.

மிருகசீரிஷம் - 1, 2:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது  லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமையில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

***************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

09-11-2022  அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

13-11-2022  அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-11-2022 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-11-2022 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எந்த ஒரு சிறிய  விஷயத்தையும் கவனமாக  கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய மிதுன ராசிக்காரர்களே இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம்  கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய கிளைகள்  தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

குடும்பத்தில்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.  வாகனத்தை  ஓட்டும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம்  எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மேலிடத்தில் மதிப்பு இருக்கும்.

கலைத்துறையினருக்கு அலைச்சல் குறையும். ஓய்வு கிடைக்கும். பயணங்கள் சந்தோஷமானதாக இருக்கும். நிம்மதியான காலகட்டமாக இருக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.

மிருகசீரிஷம் - 3, 4:

இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

திருவாதிரை:

இந்த மாதம் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

புனர்பூசம் - 1, 2, 3:

இந்த மாதம் உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும். 

பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 01, 02; 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

****************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - சப்தம ஸ்தானத்தில் சனி, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

09-11-2022அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

13-11-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-11-2022  அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-11-2022 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நிறைய யோசிக்கும் திறமையுடைய கடக ராசிக்காரர்களே நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள்  உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள் பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

புனர்பூசம் - 4:

இந்த மாதம் சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பரிகள் மற்றும் அருகிலிருப்பவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.

பூசம்:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.  மன நிம்மதி கிடைக்கும்.

ஆயில்யம்:

இந்த மாதம் உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 03, 04; 30

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

****************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

09-11-2022 அன்று புதன் பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

13-11-2022 அன்று சுக்ர பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-11-2022அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-11-2022 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத  குணமுடைய சிம்மராசியினரே இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட  கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து இருக்கும். வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார  விரிவாக்கம் தொடர்பான  பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உல்லாச பயணமாகவும் அது அமையும். பேசும் போது மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு அதிக ஆர்டர்கள் கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற விஷயங்களைச் செய்து ரசிகர்களை கவர்வீர்கள்.

மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

மகம்:

இந்த மாதம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.

பூரம்:

இந்த மாதம் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

உத்திரம் - 1:

இந்த மாதம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை  அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 05, 06

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

****************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, சந்திரன் - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

09-11-2022 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

13-11-2022 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

28-11-2022 அன்று புதன் பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல்  உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய கன்னி ராசிக்காரர்ளே  இந்த மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரிய படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும்.

கலைத்துறையினருக்கு புகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும்.

மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

உத்திரம் - 2, 3, 4:

இந்த மாதம் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். புத்திர பாக்கியத்தை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள்.

ஹஸ்தம்:

இந்த மாதம் பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும்.

சித்திரை - 1, 2:

இந்த மாதம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியை சந்திப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 07, 08

அதிர்ஷ்ட தினங்கள்: 01, 02; 28, 29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com