மகரத்துக்கு நினைத்த காரியம் நிறைவேறும்! ஆனால்? வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
மகரத்துக்கு நினைத்த காரியம் நிறைவேறும்! ஆனால்? வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வீர்கள். உடன் உழைப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்ப்புகள் இருக்காது. வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டு. 

உத்தியோகஸ்தர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.  

அரசியல்வாதிகளுக்கு அனைத்துக் காரியங்களும் குறித்த நேரத்தில் நடக்கும். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களுக்கு படிப்படியான வளர்ச்சி உண்டாகத் தொடங்கும்.  வியாபாரிகளின் பேச்சை பிறர் கேட்டு நடப்பார்கள். விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு இக்கட்டான தருணங்களில் சமயோஜித புத்தி கைகொடுக்கும். கலைத்துறையினர் புதிய நுட்பத்துடன் பணிபுரிந்து வெற்றி அடைவீர்கள்.  பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை ஓங்கும். மாணவர்கள் ஆசிரியர்களால்  பாராட்டப்படுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.  பேசும்போது எச்சரிக்கை தேவை. பந்தயங்களில் வெற்றி உண்டு.  உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளை சுலபமாக முடித்துவிடுவீர்கள்.

வியாபாரிகள் கூடுதல் தொழில் புரிய வாய்ப்புண்டு. விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் வந்தடையும்.  அரசியல்வாதிகளின் முயற்சியின்றியே சாதனைகளைச் செய்து காட்டுவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தானாகவே தேடி வரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் நிறையும். பொருளாதாரம் மேம்பாடு அடையும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வார்கள். 

வியாபாரிகள் கடினமாக உழைத்து லாபம் அடைவார்கள். விவசாயிகள் பிறரின் ஆதரவைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். 

கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை நழுவ விட மாட்டீர்கள். பெண்கள் குடும்பத்தாரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்கள் மாற்றமான நிலையை எட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - 4.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

மனதை உறுத்திய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தன்னம்பிக்கையும் தனித்திறமையும் கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பார்கள். வியாபாரிகள் லாபம் ஈட்டுவார்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவார்கள். 

அரசியல்வாதிகள் பயணங்களைத் தள்ளிப் போடவும்.  கலைத்துறையினர் திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒற்றுமை மனநிறைவைத் தரும்.  மாணவர்கள்  பெரியவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பார்கள்.

சந்திராஷ்டமம்} 5,6.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். தொழிலையும் புதிய உயர்வுக்கு எடுத்துச் செல்வீர்கள்.  

மருத்துவச் செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். வியாபாரிகளுக்கு கடன்கள் வசூலாகும். 

விவசாயிகளுக்கு மகசூலால் லாபம் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். மாணவர்கள் பெற்றோரின் மனநிலையை உணர்ந்து செயல்படுவார்கள்.

சந்திராஷ்டமம்}7,8.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டு.  உத்தியோகஸ்தர்களுக்கு இருந்து வந்த அவநம்பிக்கை விலகும். 

வியாபாரிகள் கடன்களைத் திரும்ப அடைப்பார்கள்.  விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளால் மன மகிழ்ச்சி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். 

கலைத்துறையினர் புதிய திறமைகளை வெளிப்படுத்தி, பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் உழைப்பில் சாதனைகளைப் படைப்பார்கள்.

சந்திராஷ்டமம்}9,10.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சொத்துகளை வாங்குவீர்கள்.  உடல், மன வளம் சிறப்பாக அமையும். பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிறையும்.

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு, லாபத்தைப் பெருக்கலாம்.  

கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக நடந்துகொள்வார்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். தடைபட்ட காரியங்களை செய்து முடித்துவிடுவீர்கள்.  குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். அதிர்ஷ்ட வாய்ப்புகள்தேடி வரும்.

உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆலோசனை கேட்டு செயல்படுவார்கள். விவசாயிகள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.  கலைத் துறையினர் புதிய கலைகளைக் கற்பார்கள். பெண்கள் குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். மாணவர்களுக்கு யோகம் உண்டு.

சந்திராஷ்டமம்} இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொறுமையும் நிதானமும் தேவை. நினைத்த காரியங்கள் நிறைவேறும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தால் நற்பெயரை எடுக்கலாம்.  வியாபாரிகளுக்கு கூட்டாளகளால் வருத்தம் உண்டாகும். 

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி, நஷ்டங்களைத் தவிர்க்கவும்.  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில்  கவனத்துடன் ஈடுபடவும். 

கலைத்துறையினர் பிறரால் பாராட்டப்படுவார்கள்.   பெண்கள் குடும்பத்தில் அமைதி காண்பார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடவும்.

சந்திராஷ்டமம்} இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனக் குழப்பத்தில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். பிறரிடம் விவாதம் வேண்டாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற வருவாய் உண்டு. வியாபாரிகளுக்கு பயணங்களால் ஆதாயம்  உண்டு.  விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். அரசியல்வாதிகள் ரகசியங்களைக் காப்பாற்றுவார்கள். கலைத்துறையினர் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். பெண்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் யோகா கற்றுக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வருவாய் படிப்படியாக உயரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  பெற்றோரின் உடல் நலம் கவனிக்க வேண்டி வரும்.  

கடன் கொடுக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவார்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவார்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களை அதிகம் நம்ப வேண்டாம். கலைத்துறையினர் இலக்குகளை எட்டுவார்கள்.

பெண்கள் சேமிப்புகளில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் ஞாபக சக்தியை மேம்படுத்த அதிகாலையில் எழுந்து படிக்கவும்.

சந்திராஷ்டமம்} இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com