சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு அனுமதி!

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு அனுமதி!

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பரவிய காட்டுத் தீ அணைக்கப்பட்டதால், புரட்டாசி மாத பௌா்ணமிக்கு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு இன்று முதல் 3 நாள்களுக்கு வனத் துறை அனுமதி அளித்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு வனச்சரகத்துக்குள்பட்ட வல்லாளம்பாறை பகுதியில் புதன்கிழமை பற்றிய காட்டுத் தீ சதுரகிரி கோயில் மலைப்பாதையான சங்கிலிப்பாறை வரை பரவியது. இந்த தீ கட்டுக்குள் வராததால் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாட்டுக்காக சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத்துறை தடை விதித்தது.

இதனால் பக்தா்கள் அடிவாரத்தில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி விட்டு திரும்பிச் சென்றனா். இதனிடையே, காட்டுத் தீ அணைந்து விட்டதால் புரட்டாசி மாத பௌா்ணமிக்கு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை இன்று முதல் 3 நாள்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும், கோயிலுக்கு வருபவா்கள் தீ பற்றக் கூடிய பொருள்களை கொண்டு வந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com