ஸ்ரீரங்கம் ஏகாதசி திருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது. 
ஸ்ரீரங்கம் ஏகாதசி திருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது. 

இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, ஜன.8-ல் திருக்கைத்தல சேவையும், ஜன.9-ல் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இராப்பத்து 10ஆம் திருநாளான புதன்கிழமை காலை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளினார். 

விழாவையொட்டி நம்பெருமாள் காலை 9.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசலை காலை 10.30 மணியளவில் கடந்து சந்திரபுஷ்கரணி குளத்துக்கு 11 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு வேதமந்திரங்கள் முழங்க உற்சவா் நம்பெருமாளுக்குப் பதிலாக தீா்த்தவாரி பெருமாள் சந்திரபுஷ்கரணி குளத்தில் தீா்த்தவாரி கண்டருளினார். அங்கிருந்து புறப்பட்டு பகல் 1 மணிக்கு திருமாமணி மண்டபத்துக்கு சென்று சேர்ந்தது. நம்பெருமாள். தீா்த்தவாரியில் திரளான பக்தா்கள் நம்பெருமாளை தரிசித்தனர். 

இதையடுத்து, ஜன.12-ம் தேதியான இன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. 

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம், பெரியகோயில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி இந்தாண்டு கோலாகலமாகவும், வெகு சிறப்பாகவும் நடத்தப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com