காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அங்காளம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் மண்டப நூதன கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அங்காளம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் மண்டப நூதன கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் வேகவதி வடக்கே அமைந்துள்ள ஸ்ரீ ஆகாய கன்னி அம்மன் மற்றும் ஓம் அங்காளம்மன் ஆகிய இரு தெய்வங்களாக அமர்ந்து அப்பகுதியில் அருள்பாலித்து வருகிறார்.

இவ்வாலயத்தின் புனரமைப்பு கடந்த 2010 இல் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அனைத்து விசேஷ நாள்களிலும் சிறப்பு பூஜைகளும், வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாள்களில் ஊஞ்சல் சேவைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஊஞ்சல் மண்டப அமைக்கும் பணி பல்வேறு நன்கொடையாளர்கள் பொருள் உதவியுடன் மண்டபம் அமைக்கும் பணி கடந்த ஆறு மாதத்துக்கு முன் தொடங்கியது.

பணிகள் நிறைவுற்ற காரணமாக ஊஞ்சல் மண்டப நூதன கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கி இன்று இறுதி கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பூர்ணாஹதி நடைபெற்று கலச புறப்பாடு திருக்கோயில் வளாகத்தை மேலும் பம்பை வாத்தியங்கள் முழங்க வலம் வந்து மண்டபத்திற்கு மேல் அமைக்கப்பட்ட ஸ்ரீ அங்காள அம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கலந்துகொண்ட ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குங்குமம் மஞ்சள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இன்று 6:00 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருள கைச்சிலம்ப இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com