சதுரகிரியில் மழையைப் பொருத்து மலையேற அனுமதி: துணை இயக்குநர் தகவல்

பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற அனுமதி..
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் (கோப்புப் படம்)
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்குச் செல்வதற்கு தினசரி மழையின் அளவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என புலிகள் காப்பகத் துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாள்கள் மட்டும் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை 4 நாள்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாடு நடைபெறுகிறது. வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெரிய அளவில் மலை பெய்யாததாலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படாததாலும் சதுரகிரி செல்ல பக்தர்களுக்குத் தடை இல்லை.

ஆனாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தினசரி மழைப் பொழிவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும் எனப் புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com