சுடச்சுட

  

  சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் முதன்முறையாக ருத்ர மந்திரத்தை லட்சம் முறை ஓதும் லட்ச ருத்ர பாராயணம், கோடி வில்வ அர்ச்சனை வரும் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை நடைபெற உள்ளது.

  சென்னை கார்ப்பரேட் கிளினிக் நிறுவன நிர்வாக இயக்குர் பி.ராமகிருஷ்ணன் உபயதாரராகப் பொறுப்பேற்று நடத்தும் சிறப்பு வழிபாடு குறித்து ஸ்ரீநடராஜர் கோயில் தீட்சிதர்கள் என்.பி.பட்டு தீட்சிதர், எஸ்.ராஜா சோமசேகர தீட்சிதர் ஆகியோர் கூறியதாவது:

  பொதுவாக ஸ்ரீநடராஜ பெருமானுக்கு இதுவரை ஏகாதச ருத்ரம், மஹா ருத்ரம், அதி ருத்ரம் ஆகிய பாராயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
  தற்போது முதன்முதலாக லட்சம் முறை ருத்ர மந்திரத்தை பாராயணம் செய்யும் லட்ச ருத்ர பாராயணம் வரும் ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

  தினமும் 100 தீட்சிதர்கள் இணைந்து காலை 9 மணி முதல் 12 மணி வரைக்கும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரை பாராயணம் செய்வதன் மூலம் 1,08,900 பாராயணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

  நாள்தோறும் ருத்ர மந்திரம் ஓதும் வேளையில் 100 பேர் கோடி வில்வ அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai