நவராத்திரியில் ஒன்பது நாள்களும் செய்யவேண்டியவை!

நவராத்திரி என்றாலே பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் உண்டான நாளாகக் கொண்டாடப்படுகிறது. 
How to fast properly on Navratri?
How to fast properly on Navratri?

நவராத்திரி என்றாலே பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் உண்டான நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

நவ நாட்களில் என்னென்ன செய்யலாம் என்பதை தீர்மானம் செய்துகொண்டால் குழப்பம் தீரும். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியை எப்படி ஆராதிக்கலாம் என்பதைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன. 

நவதுர்கா முதல் நாளிலிருந்து வரிசையாக..

1.சைலபுத்ரி
2.பிரம்மசாரினி
3.சந்த்ரகண்டா
4.கூஷ்மாண்டா
5.ஸ்கந்தமாதா
6.காத்யாயனி
7.காலராத்ரி
8.மஹாகெளரீ
9.ஸித்திதாத்ரி

9 நாள்களும் போட வேண்டிய கோலங்கள்

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு 
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்

• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தா

ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்

• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்

• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸான்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரைப்  பொங்கல்.

இவற்றை மனதில் கொண்டு, அன்றைய பூஜைக்கு ஏற்பாடாக முன்கூட்டியே தயார் செய்து கொள்ளலாம். அநேக வீடுகளில், பூஜை விஷயத்தில் தான் அது சரியில்லை இது சரியில்லை என்று கருத்து வேறுபாடு வந்து விடுகிறது. நல்ல நாட்களில் தெய்வ வழிபாட்டினை முழுமனதுடன், ஈடுபாட்டுடன் செய்வோம். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com