Sunday, December 10 2023 10:27 AM

அறிமுகம்

வானம்பாடிக் கவிதைகளில் வேர்பிடித்து, நவீனத்துவத்தில் கிளைவிரித்துப் பூத்திருக்கிற கவிதைமொழியில் தேர்ந்த கவிஞர் தங்கம் மூர்த்திக்கு மரபார்ந்த நவீனத்தோடு கூடிய எளிமையும் தெளிமையும் இயல்பாக கைவருகிறது.

மெளனத்தைப் பிழிந்தால் சொட்டுச்சொட்டாய் சொற்கள் உதிர்வதும், வானத்தில் எழுதினால் நட்சத்திரங்களாவதும், காற்றில் எழுதினால் பறவைகளாவதும், கவிதைக்கரத்தால் நதியைத் தொட அது திறந்துகொள்வதும், தமிழ்க் கவிதைக்கு அழகியல் மிளிரமிளிர அவர் வழங்கியிருக்கிற புத்தம்புது படிமங்கள். அவை வாசிப்பின்பத்தின் உச்சத்துக்கு நம்மை அழைத்துச்செல்பவை. அவை முழுமையான தனித்துவத்தோடும், தன்னளவில் ஒளிர்கிற ஒரு தத்துவச் சாயலோடும் வெளிப்படுகின்றன.

பல்வேறு சூழல்களில் இவரது கவிதைகளில் அணில்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. குயில் பறந்து சென்ற பிறகும் அதன் பாடல் இலைகளின் சலசலப்பில் தங்கிவிடுவதைப்போல தொகுப்பை வாசித்து மூடியபின்பும் நமக்குள் ஓடியாடியவாறிருக்கின்றன அணில்கள்.

எல்லாம் படித்து, எல்லாம் மறந்தபின் வடிகட்டிய மீதமாய் நமக்குள் தங்குவதுதான் ஒரு உன்னதமான படைப்பு. அவ்வகையில் தமிழ்க் கவிதையின் நெடிய வரிசையில் இக்கவிதைத் தொகுப்பு சேர்ந்துகொள்கிறது.

எம்.வி.வி.யின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர், இளம் வயதிலேயே அபூர்வமான - இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று நிரூபித்திருக்கும் - இலக்கியப் பித்துக்கு ஆட்பட்டுப்போனவர்.

அவரது இளைமைக்கால ஆவேசம் அவருடைய கனவின் ஒரு பகுதியைக் கூட நிறைவேற்றாமல் சிதைந்து போனதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

மனதார அவர் ஏற்ற பணிக்குச் செலவிட்ட காலத்தையும் உழைப்பையும் விட பிழைப்புக்காக கேவலப்பட்ட மனத்துடன் செலவிட நிர்பந்திக்கப்பட்ட காலமும் உழைப்பும் அதிகம்.

எம்.வி.வி.யும் எவ்வளவோ நினைவுகளை நமக்குப் பதிவு செய்து தந்திருக்கக்கூடியவர்தான். இன்னும் எவ்வளவோ படைப்புகளையும் தந்திருக்கக்கூடியவர்தான். ஏன் தரவில்லை என்று அவரிடம் கேட்க நமக்கு யோக்கியதை இல்லை என்பதையும் இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.

மரணமும் இறப்பும் ஒன்றா, வேறு வேறா? மனம் என்றால் எது? அது உடம்பின் உள்ளே இருக்கிறதா, வெளியிலா? பேய் என்ற ஒன்று எல்லா காலத்திலும் உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே, எப்படி? எல்லா  கேள்விகளுக்குமான நியாய எதார்த்த தன்மையுடன் கூடிய பதில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.

மனிதன் தனது இறப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா? முடியும் என்கிறது நாவல். அந்த காலத்து சித்தர்கள் அதைச் சாதித்துக் காட்டிய விதமும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

“ஆதுர சாலை” ஒரு மருத்துவ நாவல். இந்திய மண்ணின் மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் மேனியை அரித்து அழித்துவிட்ட கறையானாக அலோபதி திகழ்வதை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் விவரிக்கிறது.

பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்;

 இவ்வளவுதானா இராசேந்திரசோழன்?

வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும் நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத ரகசியங்களால் நிரம்பி வழிவது.

 இராசோ பெருங்கலைஞர். தமிழில் வாழ்க்கையின் விசித்திரங்களை வியந்து வியந்து எழுதிய புதுமைப்பித்தனையும், மிக மிக நுட்பமான உணர்வுகளைச் சின்னச்சின்ன வருணனைகளில் அபாரமாக எழுதிய தி.ஜானகிராமனையும் வியந்தவர்.

சமூகச் சிக்கல்களைத் தன் கட்டுரைகளில் பேசியவர். எந்த ஓர் எழுத்தாளனையும் முத்திரை குத்தியே பழக்கப்பட்டுப்போன சமூகம், இராசோ என்கிற அரசியல் போராளியை அடையாளப்படுத்திய தோழர்கள், இராசோ என்கிற கலைஞனை உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை.

இத்தொகுப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இராசோ என்ற பெருங்கலைஞனை உணர்ந்துகொள்ள வைப்பதே...

ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பயணம். மின்சாரம் - மின்னல் - மயிலிறகு - மாற்றம் - முறுவல் - மெளனம் - முத்தம் - மிதப்பு என எதுவும் தரலாம் ஒரு கதை. என்றபோதும், தருவதல்ல அதன் நோக்கம். மலர்வது மட்டும்தான். அதன் மணம் ஒரு நுழைவாயில்.

ஆண் பெண் காதலில் உறவில் உரிமையில் கால மாற்றங்களுக்கு ஏற்ப எத்தனையோ மாறுபாடுகள், இன்றைய கால கட்டத்தில் இரு உயிருக்குமான  இணக்கம் ,  அந்த பிணைப்பு ஒரே நாளில் ஏற்படக்கூடியதா என்ன? எத்தனை எத்தனை பகிர்வுகள் , மோதல்கள், காதல் நிகழ்வுகள் , மனமுடைந்த தருணங்கள் இவையனைத்தையும்கடந்து நிற்கும் அன்பும் அணைப்பும் தானே நித்திய காதல் ஜோடிகளை ஊருக்கும் உலகுக்கும் ஏன் அவர்களுக்குமே  அடையாளம் காட்டுகிறது. பிணைப்பில்லாத பிடியில்லாத அல்லது உறவை மன சகிப்பின்றி பொறுமையின்றி  கைவிட்ட இணையர்கள்தானே கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் விவாகரத்து கேட்டு நடையாய் நடக்கிறார்கள்  உருகி உருகி காதலித்து மணம் புரிந்த எத்தனை ஜோடிகள் நீதிமன்ற வாசலில் பிரித்து விட சொல்லி படியேறி கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம்பிரியவும் தோதின்றி சேரவும் மனம் இன்றி அந்தரத்தில் தவிக்கும் தம்பதிகள் எத்தனை எத்தனை மனச்சோர்வுகளோடு வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள். வாழ்வும்அதன் வழியே ஆணும் பெண்ணும் நிகழ்த்தும் வண்ணக்கோலங்களை மன உக்கிரங்களை ஷபியின் ரஃபியின் கண்கள் வழியே இனி இக்கதை வாயிலாக  அனுபவித்து பார்க்கப்போகிறோம் .திம்மக்கா என்ற தேவதையின் திடீர் விஜயமும் வாழ்வின் ஆழ் பரிமாணங்களை கோணங்களை நமக்கு காட்டத்தான் போகிறது. மலையேறும் சிறு உயிரின் மனம் தான் இலக்கை அடைவோம் எண்றெண்ணியே துவங்குகிறது. காதல் செய்யும் உயிரின் உணர்வு தான் மகிழ்ந்து செழித்து இணைந்து வாழ்ந்திருப்போம் என்றே மனதை உருவேற்றுகிறது. பூமிக்கு  மேலே ஆகாயம் இருப்பது போல், ஆகாயத்திற்கு மேலேயும் இன்னொரு ஆகாயம் இருக்குமா இல்லை இன்னொரு பூமி இருக்குமா  என்று கேட்கும் வெகுளி பறவையாய் காதலுக்கும் நேசத்துக்கும் கூட அதைத்தாண்டிய இன்னொரு படிநிலை  உண்டா என்ற கேள்வியோடு  ஷபி ரஃபியின் வாழ்வை வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்.

பயாஜித் என்கிற சூஃபி ஞானியைப் பற்றிக் கூறுவர், அவர் மிகவும் மகிழ்ச்சியான மனிதர். ஏறக்குறைய பரவசமானவர்.

யாரும் அவரை மகிழ்ச்சியற்றோ, முகத்தைச் சுழித்தோ, குறை கூறியோ, சோகமாய் இருந்தோ, பார்த்ததே இல்லை. என்ன நிகழ்ந்தாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். சில நேரம் அங்கே உணவிருக்காது, ஆனால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார். சில நேரம் நாள்கணக்கில் உணவில்லாமல் இருப்பார். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார்.

யாரோ கேட்டார்கள், “பயாஜித், இப்பொழுதாவது உங்களுடைய சாவியை, ரகசியத்தைக் கூறுங்கள். உங்களுடைய ரகசியம்தான் என்ன?”

அவர் சொன்னார், “அங்கே ரகசியம் என்று எதுவும் இல்லை. அது ஒரு எளிமையான விஷயம். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் கண்களைத் திறக்கும்பொழுது, கடவுள் எனக்கு இரண்டு மாற்றுகளைக் கொடுப்பார். அவர் சொல்வார்: ‘பயாஜித், நீ மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறாயா? அல்லது மகிழ்ச்சியற்றா?’.
நான், “கடவுளே, நான் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறேன்’ எனக் கூறுவேன். அதோடு நான் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பேன், மகிழ்ச்சியாக இருப்பேன். அது ஒரு எளிமையான தேர்வு, அது ஒரு ரகசியமல்ல.”

மகிழ்ச்சியாகவோ, மகிழ்ச்சியற்று இருப்பதோ உன்னுடைய விருப்பம் என்று முடிவெடுக்கும் நாளில், வாழ்க்கையை நீ உன் கைகளில் எடுத்துக் கொள்கிறாய் - நீ குருவாகி விடுகிறாய். இப்பொழுது நீ வேறு யாரோ ஒருவர் உன்னைத் துயரமாக்குகிறார் என்று எப்பொழுதும் கூறமாட்டாய். அது அடிமை ஸாஸனம்.

நவீன காலகட்டத்தில் பரவலாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், உளவியலாளர்கள், நரம்பியல் மருத்துவர்கள் என்று பல தரப்பினரும் பதறும் நிலையை எட்டியிருக்கிறது மொபைல் போதை.

மொபைல் போதை எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்தே சமச்சீராகக் கெடுக்க ஆரம்பித்துவிடும். உதாரணமாக உட்கார்ந்தே இருப்பதால், கழுத்து, முதுகு, இடுப்பு வலிகள், கூடவே போனஸாக கண்களில் பாதிப்பு மற்றும் உடல் பருமன் அதிகமாதல்.

அதே சமயம் ஆண்ட்ராய்ட் என்பது கைக்குள் இருக்கும் உலகம் போலத்தானே? அதில் கிடைக்காதது இல்லையே? என்று கேட்டால், பதில், அது உண்மைதான். அதில் கல்வி, மருத்துவம், தொழில், பொதுதுபோக்குகள், ஆன்மீகம், நூல்கள் என்று எதுவும் கிடைக்கும், இது வரம் என்றும் நிச்சயமாகச் சொல்லலாம்.

ஆனால் என்ன நடக்கிறது? நாம் பணம் கொடுத்து வாங்கிய ஒரு கருவி, நம்மை, நமது நேரத்தை ஆளுமை செய்கிறது. உறவுகளைத் தீர்மானிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அதன் கட்டுப்பாட்டில் நம்மை முழுவதுமாக இழுத்துக் கொள்கிறது. நாமும் விருப்பத்துடன் அதன் பிடிக்குள் செல்கிறோம்.

நட்பின் பல்வேறு பரிணாமங்களையும் அலசும் அருமையான நூல். புராணம், சங்க இலக்கியம், திருக்குறள், கிரேக்க இலக்கியம் யாவும் காட்டும் நட்பைச் சுவைபட சொல்லி நல்ல நண்பனை அடையாளம் காண வழிகாட்டும் நூல்.

ஆசிரியர் குறிப்பு

மாநிலங்களவைப் பாராளுமன்ற உறுப்பினரான ஜெயராம் ரமேஷ் 2006-2014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட  காலகட்டத்தில் கிராமப்புற வளர்ச்சி, குடி நீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் காடுகள்,  எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய முக்கியத் துறைகளில் அமைச்சராகப் பணிபுரிந்துள்ளார். சிறப்பாக விற்பனையாகி வரும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் - பழைய வரலாறும், புதிய புவியியலும்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்தல் (2016), சரிவிலிருந்து திரும்புதல்:  இந்தியாவின் 1991ஆம் ஆண்டின் கதை (2015),  நீதிக்காகச் சட்டம் இயற்றுதல்: 2013 - நிலம் கையகப் படுத்துதல் சட்டம் (2015), பசுமையின் அறிகுறிகள்: இந்தியாவில் சூழலியல், வளர்ச்சி, ஜனநாயகம் (2015), சீனிந்தியா தெளிவான புரிதல்: சீனா இந்தியா குறித்த ஆழ்ந்த சிந்தனை (2015), கவுடில்யர் இன்று: உலகமயமாகிவரும் இந்தியா பற்றி ஜெயராம் ரமேஷ் (2002) ஆகிய புத்தகங்களும் அடங்கும். 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

இயற்பெயர் மு.கா. முகம்மது அலி. கடையநல்லூரில் பிறந்தவர். தாயார்: நாகூர் மீறாள். தந்தை: காதர் நாகூர். பெங்களூர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 41 ஆண்டுகள் பணி. பணி ஓய்விற்குப் பின்னர் கடையநல்லூரில் வசிக்கிறார். ‘முடவன் குட்டி’ என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை எப்போதாவது எழுதுவதுண்டு. அவை திண்ணை, சமரசம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

இயற்பெயர் டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி. வரலாற்றாசிரியர்; புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் The Face Behind the Mask, The Singer and the Song, Mirrors and Gesture என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

சிறுகதைத் தொகுதிகள் ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013), ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ (2014) ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ (2019), ‘ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்’ (2019). இவரின் கதைகள் ஆங்கிலத்தில் A Purple Sea, In a Forest, A Deer, Fish in a Dwindling Lake, A Night With a Black Spider, A Meeting On the Andheri Over Bridge என ஐந்து தொகுதிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிலாவின் Fragrance of Peace கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார். விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011) முதலானவற்றைப் பெற்றிருக்கிறார். SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார்.

Blurb

ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப்பில் எடுத்துக்கொள்ளப் படாத ஒன்று. லாட்வியாவைப் பொருத்தவரை நாஸிகளோடு உடன்போன நாடு என்றே அது அறியப்படுகிறது. ஸான்ட்ரா கால்னியடேயின் ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்...’ நூல் ரஷ்யக் கம்யூனிஸ அரசு லாட்வியாவை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான லாட்விய யூதர்களையும் மற்ற லாட்வியர்களையும் கொன்று, ஆயிரக்கணக்கானவர்களை ஸைபீரியாவுக்கு நாடுகடத்திய லாட்விய வரலாற்றுடன் ஸ்டாலின் என்ற கொடுங்கோலனின் ஆட்சி முறையையும் அதில் சிக்குண்டு அலைக்கழிக்கப்பட்டக் குடும்பம் ஒன்றின் வரலாற்றையும் நினைவு களையும் கூறுவது. கால்நடைகளுக்கான சரக்கு வண்டிப் பெட்டிகளில் ஏற்றப்பட்டு ஸைபீரியாவின் கடும் பனியில் வாழ்ந்தும் இறந்தும் போன குடும்பத்தின் உண்மை வரலாறு. பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டக் குழந்தைகள், பிரிக்கப்பட்டக் காதலர்கள், தந்தை ஒரு புறமும் தாயும் குழந்தைகளும் ஒரு புறமும் மீண்டும் சந்திக்கவே முடியாதபடி பிரிக்கப்பட்ட அவலம், சிறை முகாம்களில் நோயால் பீடிக்கப்பட்டு ரத்தம் கக்கி உயிர்விட்டவர்களின் சோகம், பட்டினியிலிருந்து மீள எலிகளையும் இறந்த மிருகங்களையும் புல்லையும் மரப்பட்டைகளையும் புசித்து வாழ்ந்த குலாக் என்னும் கொடுமை இவற்றைக் கூறும் நூல் இது.

ஆசிரியர் குறிப்பு

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். கிராமங்களில் சிதறிக் கிடக்கும் பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டைச் சேகரித்து ஆராய்வது இவரது பணி. இவர் பதிப்பித்ததும் எழுதியதுமான நூல்கள் எண்பத்தி மூன்று. தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதை ‘தென்னிந்தியத் தோல்பாவைக் கூத்து’ (2003), ‘தென்குமரியின் கதை’ (2004) நூல்களுக்காக இருமுறை பெற்றிருக்கிறார்.

இவரது முக்கியமான நூல்கள், ‘நாட்டார் நிகழ்த்துக் கலைக்களஞ்சியம்’ (2001), ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம்’ (2003), ‘ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்’ (2006), ‘தாணுமாலயன் ஆலயம்’ (2008), ‘இராமன் எத்தனை ராமனடி’ (2010), ‘வயல்காட்டு இசக்கி’ (2013), ‘முதலியார் ஓலைகள்’ (2016), ‘சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்’ (2018) ‘தமிழறிஞர்கள்’ (2018), ‘தமிழர் பண்பாடு’ (2018) ஆகியன.

Blurb

தமிழக நாட்டார் வழக்காற்றியல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஆய்வாளரின் அனுபவப் பதிவுகளும் ஆய்வும் அடங்கியது இந்நூல். பண்பாட்டில்

மேல் கீழ் என்பதில்லை; இப்படிப் பகுப்பதற்கான விதிமுறைகள் பிறப்பு, பணம், செல்வாக்குக் காரணமாக உருவாயின. மரபில் தொடரும் விழுமம் சாதி தாண்டி இருப்பதுண்டு. இன்றைய புரட்சிகரமான எண்ணங்கள் பழைய பண்பாட்டிலும் உண்டு. எழுத்துவடிவ வரலாற்றுச் சான்றுகளுக்கு மாறான வாய்மொழிச் சான்றுகள் பெருமளவில் தொகுக்கப்படவில்லை. இப்படிப் பல செய்திகள் அடங்கியது இந்த நூல்.

அ.கா. பெருமாள் எழுதிய ‘வயல்காட்டு இசக்கி’

நூலின் தொடர்ச்சி.

தெ.வே. ஜெகதீசன்

ஆசிரியர் குறிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வசித்துவருகிறார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்; வரலாற்றிலும் இலக்கிய வாசிப்பிலும் அதீத நாட்டமுள்ளவர்.

‘கரையும் தார்மீக எல்லைகள்’ கட்டுரைத் தொகுப்பு இவரது முதல் நூல். சிங்கைத் தமிழ்ச் சமூகம் இவரது ஆய்வுநூல்.

Blurb

சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையை ஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’.

ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல்.

நூலாசிரியரின் பரந்துபட்ட அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி, கருத்தில் தெளிவு கூடுகிறது.

சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் ‘பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்’ என்ற பழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல். பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம் என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால்

க. கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’.

ஆசிரியர் குறிப்பு

லால்குடியில் பிறந்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில்  பள்ளிப்  படிப்பு; இளநிலை வணிகவியல் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடி வடக்குக்கு இடப்பெயர்வு. குஜராத், மகாராஷ்டிரம், சில அயல் நாடுகள் என்று பல இடங்களில் பல நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, கடந்த ஏழு வருடங்களாக ஒரு பன்னாட்டு உணவு நிறுவனத்தில் விற்பனைப் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார். 2011இலிருந்து வலைதளத்திலும் இணையப் பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். பௌத்தம், வரலாற்று நூல்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். இவரது சிறுகதைத் தொகுப்பு ‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோவில்’ (2016).

மனைவி: ஹேமா; புதல்விகள்: பூஜா, ஷ்வேதா ஆகியோருடன் தில்லியில் வசிக்கிறார்.

Blurb

சமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல். தமிழ், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், சீனம், ஜப்பான், திபெத், கொரியன், சிங்களம், ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. இவை அனைத்தையும், எந்தத் தனிமனிதராலும் அவரது வாழ்நாளுக்குள் முழுவதுமாகக் கற்றறிந்துவிட முடியாது. எனவே பௌத்த நூல்களில் சேகரமாகியிருக்கும் அறிவுச் செல்வத்தைத் தொகுத்தளிக்கும் நூல்களுக்கு, ஒரு சமகாலத் தேவையும் நியாயமும் எப்போதும் இருக்கவே செய்கிறது. இதை பௌத்த ஞானப் பிழிவாக இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன். நம் பௌத்த அறிவு மேலும் விரிய உதவுவதுடன், வாசிப்பின் மகிழ்வையும் இந்நூல் தூண்டிவிடுகிறது.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

புதுவைப் பல்கலைக்கழக முன்னாள் ஃபிரெஞ்சுத் துறைத் தலைவர், வாழ்வியல் புலத் தலைவர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தகைசால் அறிஞர். ஃபிரெஞ்சு அரசின் ஷெவாலியே, ஒஃபீசியே, கொமாந்தர் ஆகிய விருதுகளையும் ரொமேன் ரொலான் விருதையும் பெற்றவர். ஃபிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பல மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார்.

Blurb

பஷார் அல்-ஆசாத்  அரசுக்கு   எதிராக  டமாஸ்கஸின் புறநகர் தராயா கிளர்ச்சியில்  ஈடுபட்டபோது அது கடும்  முற்றுகைக்கு ஆளானது. முற்றுகை நீடித்த நான்கு ஆண்டுகள், அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய் குண்டு வெடிப்புகள், இரசாயன வாயு தாக்குதல்கள்  போன்ற கொடுமைகளைத்  தராயா எதிர்கொள்ள வேண்டி இருந்தது. வறுமை, பசி, பட்டினி ஆகியவை தலைவிரித்தாடின. பஷார் அல்-ஆசாத்தின்  அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் போது, சுமார் நாற்பது இளம் புரட்சியாளர்கள் விசித்திரமான சபதமொன்றை எடுத்துக் கொண்டனர். தகர்த்தப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் கீழ் ஆயிரக்கணக்கான நூல்கள் சிதறிக்கிடப்பதையறிந்து, அவற்றைத் தோண்டியெடுத்து  ஊரின் நிலத்தடிக்குக் கீழ் ஒரு நூலகம் அமைக்கத் தீர்மானித்தனர்.

புத்தகங்களை  ஆயுதங்களாகக் கொண்டு   எதிர்ப்பதென்பது ஓர் உருவகம்தான். எந்த ஓர் அரசியல் ஆதிக்கத்திற்கும், அல்லது மத  ஆதிக்கத்திற்கும், அதனை ஓர் எதிர்ப்புக்குரலாகத்தான் கருதவேண்டும். ஒரு பக்கம் பஷார் அல்-ஆசாத்தும், இன்னொரு பக்கம், டாட்ச் எனும் தீவிரவாத இயக்கமும்   தங்கள் ஆதிக்கத்தை வலுவடைய முயற்சி மேற்கொண்டிருக்கும்போது, ஒரு மூன்றாவது சக்தியாக அந்தக் குரல் ஒலித்தது.  2011 ஆம் ஆண்டு ஆசாத்துக்கு எதிர்ப்பாக வெடித்த அமைதி  ஆர்ப்பாட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியது. அதுபற்றிய இக்கதை பிரெஞ்சு பத்திரிகை நிருபர் ஒருவருக்கும் போராளிகளுக்குமிடையே ‘ஸ்கைப்’ வழியே  நடைபெற்ற உரையாடல்கள் அடிப்படையில் சொல்லப்படுகின்றது. தன்னுரிமை, சகிப்புத்தன்மை, இலக்கியத்தின் மேலாண்மை ஆகியவற்றிற்கு இது ஒரு துதிப்பாடலாகும்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

பிறப்பு மைசூரில். படிப்பு B.A.வரை. ஒரு தனியார் நிறுவனத்தில் வியாபாரப் பிரிவின் அகில இந்திய மேலாளராக முப்பத்தைந்து வருடங்கள் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். நிழற்படக் கலையில் ஆர்வம் உள்ளவர். அகில உலக, தேசியக் கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுப் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் இவர் மொழிபெயர்த்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

Blurb

வெறும் சுய செய்திகளாகவும் சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை.

டி.பி. அசோக் கதைகளின் மீது கனவுத்தன்மையைப் படியவைப்பதன் வழியாக அவற்றை ஒளிகொள்ளச்செய்யும் திவாகரின் கலை மிக முக்கியமானது. இது கதைகூறலில் அவர் கண்டடைந்த வெற்றிகரமான வழிமுறை. எழுபதுகளிலேயே அந்த வழிமுறையைக் கண்டடைந்து செயல்படுத்திய முன்னோடிப் படைப்பாளியென்றே அவரைக் குறிப்பிடவேண்டும். ஒன்றைப்போல பிறிதொன்றை உருவாக்காமல் ஒவ்வொன்றையும் புதிது புதிதாக உருவாக்கும் புதுமைநாட்டம் அவரை முக்கியமான சிறுகதையாளராக உருவாக்கியுள்ளது.

பாவண்ணன்

தொகுப்பாசிரியர் குறிப்பு

கோவையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவருபவர். இந்திய தணிக்கை - கணக்காயத்துறையில் பணி யாற்றுகிறார். வீட்டில் நிலவிய சூழல் அளித்த ஆர்வத்தால் சிறு வயதிலிருந்தே வாசிப்பில் ஈடுபட்டார்.  நவீனத் தமிழ், ஆங்கில இலக்கியங்களிலும் ஆங்கிலம் வழியாகப் பிற மொழி இலக்கியங்களிலும் தீவிர வாசிப்புக் கொண்டவர். இணைய இதழ்களிலும் முக நூலிலும் கட்டுரைகளும் நூல் விமர்சனங்களும் எழுதி வருகிறார். 

Blurb

நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைகளங்கள். மத்தியதர வர்க்க மனிதர்களை அவரது கதை மாந்தர்கள். இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள். உண்மைகளுக்குள் மறைக்கப்படும் போலித்தனங்களையும் பொய்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிஜங்களையும் பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது.

ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டுபவையான பதினாறு சிறுகதைகள் கொண்டது இந்தத் தொகுப்பு.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

குமரி மாவட்டம், குளச்சலில் பிறந்தவர். தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார். வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்காக நாலடியார் அறநூலை மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார்.-மொழி பெயர்ப்பிற்கான சாகித்ய அகாதெமி, தொ.மு.சி. ரகுநாதன், ஆனந்த விகடன், உள்ளூர் பரமேஸ்வரய்யர், வி.ஆர். கிருஷ்ணய்யர், நல்லி - திசையெட்டும், ஸ்பாரோ கவிக்கோ உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

Blurb

சேதுவுக்கு எப்பவும் ஒரே ஒரு ஆள் மேல மட்டும்தான் ஆசை. அது சேது மேல மட்டும்தான்! . . ." நாவலின் இறுதிப்பக்கத்தில் நாயகன் சேதுவின் பால்யகால காதலி சுமித்ரா அவனிடமே கூறும் சொற்கள் இவை. இதுவே சேதுவை முன்னிருத்தி நாவல் மேற்கொள்ளும் நீள, அகல, ஆழ காலப்பிராயணத்தை அறிந்து கொள்ள பேரளவு துணைபுரியக்கூடியதாகும். எதிலும் மனம் ஊன்றாத மானுடர்கள்  'தப்பித்து', 'தப்பித்து' கடைசியில் சென்று நிற்கும் புள்ளி எதுவென அறியத்தரும் நாவலும் கூட. 'மூக்குபொடி' வாங்க சொற்பக் காசு இல்லாமல் அறைக்குள் சென்று முடங்குபவனே ' சேது முதலாளி' ஆகும் கதை. வேலை கேட்டு தந்தையோடு குறுகி நின்று அவமானப்பட்டுத் திரும்பிய சேதுவின் வாசலில் பின்னொரு காலத்தில்  ஊர்மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பணி வேண்டி காத்திருப்பதன் கதை. பெண்களை தற்காலிக இளைப்பாறுதலுக்கும் இயலாமைகளின் சமன்படுத்தலுக்கும்  உபயோகிப்பவனின் கதை.

கேரள நவீனத்துவ இலக்கிய முகங்களுள்  ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரின் நடை அழகும்  உபபாத்திரத்தை மட்டுமல்ல சிறிய அளவில் வரக்கூடியவர்களைக்  கூட  முழுமை அளித்து தீட்டிக் காட்டும் சித்தரிப்புகளின் துல்லியமும்  தமிழுக்கு வேண்டியன. போலவே கூர் குன்றாத கத்தி போன்ற உரையாடல்களும்.

மலையாள இலக்கியத்தின் வலுவான ஆக்கங்களைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வரும் குளச்சல்.மு. யூசுப் இந்தப் படைப்பையும் குந்தகம் நேராத உயிரோட்டமான நடையில்  தமிழாக்கி இருக்கிறார்.

16. பெரிதினும் பெரிது கேள்

நம் தமிழ்ச் சமூகத்தின் அருமை பெருமைகளை, தமிழ் மொழியின் சிறப்புகளை நாம் அவ்வப்போது உணர்ந்துகொள்ள கீழடி போன்ற ஆய்வுகள் தோன்றி நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.  தமிழ் மொழியை வளர்த்த அறிஞர்கள் பற்றி, தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிய அரிய தகவல்கள், சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத தியாகள் பற்றி நூலாசிரியர் படித்தறிந்தவற்றை தொகுத்துத் தந்துள்ளார்.

ஆசிரியர்: முனைவர் .செந்தில் குமார், காவல் கண்காணிப்பாளர்

தற்போது திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக உள்ளார். தீவிர புத்தக வாசிப்பாளர். அவரவர்களுக்குப் பிடித்த பணியை, செயலை, வாழ்க்கை முறையாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டால் பணி என்பது சுமையாக இல்லாமல் அர்ப்பணித்துச் செயல்படுத்துவதாக அமையும் என்ற நோக்கத்தைக்

15. விகடன் இயர் புக்-2020

கீழடியின் பெருமைகளைப் பேசும் கட்டுரை, யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதியவர்களின் தேர்வு அனுபவங்கள், 2019-ம் ஆண்டு செய்திகளில் வந்த பிரபலங்கள், அம்பேத்கரின் அறியப்படாத இன்னொரு பக்கத்தைக் காட்டும் கட்டுரை, சந்திரயான் - 2 திட்டத்தின் நுணுக்கச் செயல்பாடுகளை விளக்கும் அறிவியல் கட்டுரை... என இதில் இருப்பவை அனைத்தும் அவசியமான தகவல்கள்.

14. நூல்: நீங்களும் செஃப் ஆகலாம் 

இட்லி, பொடி, சட்னி, சாம்பார், ரசம், பூரி, சப்பாத்தி, பராத்தா, ரொட்டி, காபி, டீ ஆகியவற்றில் இவ்வளவு வகைகளா என ஆச்சர்யப்படும் வகையில் 340 ரெசிப்பிகள் உள்ளன இந்த நூலில். இது உங்கள் கையில் இருந்தால் நீங்களும் ஒரு செஃப்தான்.

ஆசிரியர்: லட்சுமி வெங்கடேஷ்

நட்சத்திர ஓட்டல் உணவுத் தயாரிப்புகள், பேக்கரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நேரடிப் பயிற்சி பெற்றிருக்கிறார். தொழில்ரீதியான உணவு அலங்கார நிபுணர் மற்றும் புகைப்படக் கலைஞராகவும் உள்ளார்.

13. நூல்: அஞ்சறைப் பெட்டி

 

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் எனும் முதுமொழியின் காரணி மிளகு போன்ற அஞ்சறைப் பெட்டி பொருள்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவைக்கிறது இந்த நூல். அஞ்சறைப் பெட்டியை அலங்கரித்து நம் ஆரோக்கியத்தையும் காக்கும் நறுமணப் பொருள்களின் மருத்துவக் குணங்கள் எவ்வளவு முக்கியமாகத் திகழ்கின்றன என்பதைப் பேசும் நூல்.

ஆசிரியர்: வி.விக்ரம் குமார்

சித்த மருத்துவர். மூலிகைத் தோட்டம் அமைத்து, பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு மூலிகைகள் மற்றும் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

12. நூல்: தமிழரின் மதங்கள்

 

மனித வாழ்க்கை மேம்பட நெறிகளை வகுத்துத் தந்தவை மதங்கள். தமிழ்நாட்டில் மதங்களின் தோற்றம், அவற்றின் வளர்ச்சி பற்றியும் விளக்குகிறது இந்த நூல். தமிழர்கள் வாழ்வில் மதங்கள் ஏற்படுத்திய தாக்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் ஏன் வளரவில்லை, எல்லா மதங்களின் கூட்டமைப்புதான் இந்து மதம் என்பன போன்ற தகவல்களுடன் ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட நூல். ஆய்வுக்கு உதவும் அரிய நூலாகவும் திகழ்கிறது.

ஆசிரியர்: அருணன்

இடதுசாரி சிந்தனையாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தோடு தொடக்க காலந்தொட்டு தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர்.. தொலைக்காட்சி விவாதங்களில் தான் வைக்கும் கருத்துகளுக்கு ஆணித்தரமான விவாதத் திறமையால் வலுசேர்ப்பவர்.

11. நூல்: விந்தைமிகு மருத்துவம்

 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்களிலும் அதன் கொட்டை, விதைகளில் உள்ள மருத்துக் குணங்களை நாம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. காய்கள், கொட்டைகள், விதைகளின் மருத்துவக் குணங்களையும் இவற்றைக் கொண்டு மருந்து தயாரிக்கும் முறைகளையும் கூறுகிறது இந்த நூல்.

 

ஆசிரியர்: வெ.தமிழழகன்

இலக்கியம், அறிவியல், சட்டம், மருத்துவம், நாவல், சிறுகதைகள், சிறுவர் படைப்பு என 70 நூல்கள் எழுதியுள்ளார்.

10. நூல்: அத்திவரதர்

 சென்ற ஆண்டு அத்திவரதர் வைபவ நிகழ்ச்சி உலக ஆன்மிகப் பார்வையை காஞ்சிபுரத்தை நோக்கித் திருப்பியது. அப்படிப்பட்ட காஞ்சிபுர மண்ணின் ஆன்மிக வரலாற்றையும் அத்திவரதர் அவதார வரலாற்றையும் ஆழ்வார்களின் ஆன்மிக நெறிகளைப் பற்றியும் கூறும் நூல்.

 

ஆசிரியர்: எஸ்.கண்ணன் கோபாலன்

ஆன்மிகக் கட்டுரைகள், திருக்கோயில் வரலாறுகள் என்று எழுதி அனுபவம் பெற்றவர். ஆன்மிகப் பத்திரிகைகளில் நீண்ட காலம் பணியாற்றியவர்.

9. நூல்: மாண்புமிகு மருத்துவர்கள்

நோயாளிகள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டும் இலவசமாகவும் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மாத்திரை மருந்துகள் இல்லாமல் நோயாளிகளின் மனதை சந்தோஷப்படுத்தி நோய்களைக் குணமாக்கும் மருத்துவர்கள்.. கிராமங்களைத் தேடிச் சென்று மருத்துவம் அளிக்கும் மருத்துவர்கள்.. இப்படி தன்னலம் கருதாமல் மருத்துவ சேவையாற்றி வரும் மருத்துவர்களைப் பற்றிப் பேசும் நூல்.

ஆசிரியர்: முகில்

முழு நேர எழுத்தாளர். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா என்று வெவ்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் உரைகள் ஆற்றி வருகிறார். திரைப்படத் துறையிலும் பங்காற்றி வருகிறார்.

8. நூல்: தாய்மை ஓர் இனிய பயணம் 

பெண்களின் பிரசவ காலகட்டம், தாய்மைப் பேறு அடையப்போகிறோம் எனும் பெருமையையும் உடல் உபாதைகளையும் ஒருங்கே தரும் காலகட்டம் ஆகும். இந்தக் காலத்தில் கர்ப்பிணிகள்  உண்ண வேண்டிய பாரம்பர்ய உணவு வகைகளையும்  ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பின்பற்ற வேண்டிய மருத்துவ முறைகளையும் எளிமையாகச் சொல்லும் நூல்.

ஆசிரியர்: டாக்டர் இரா.பத்மப்ரியா

பாரம்பர்ய மருத்துவ ஆய்வு மையத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் மூலிகைத் தோட்டம் அமைத்தல், சித்த மருத்துவத்தின் நோயில்லா நெறிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துதல் போன்ற சேவைகளை  ஆற்றி வருகிறார்.

7. இன்னா நாற்பது இனியவை நாற்பது

நம் வாழ்விலும் மனதிலும் உடலிலும் மாற்றங்களையும் தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும் நடுத்தர வயதான நாற்பதுகளின் வாழ்வியலைச் சமாளிக்க வழிகாட்டும் நூல். மனதை அமைதியுடன் வைத்துக்கொண்டால் நாற்பதில் இருபது வயது இனிமையை உணரலாம் என்கிறது இந்த நூல்.

ஆசிரியர் கு.சிவராமன்

பிரபல சித்த மருத்துவரான இவர், தொலைக்காட்சிகளிலும் கருத்தரங்குகளிலும் சித்த மருத்துவத்தின் பெருமைகளை விளக்கி வருகிறார்.

6. நூல்: அங்காடித் தெருவின் கதை

எப்போதும் பரபரப்பாய்க் காணப்படும் தி.நகர் முன்னொரு காலத்தில் பெரும் ஏரியாக இருந்ததாம்... ஆங்கிலேயர் காலத்தில் சென்னை முழுவதும் ஓடிய டிராம் வண்டி தி.நகர் பகுதியில் மட்டும் இயக்கப்படவில்லை.. இப்படி தி.நகர் உருவான வரலாற்றுடன் கூடிய அரிய தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன. தி.நகரின் அமைதியான இன்னொரு முகத்தை இதில் நீங்கள் காணலாம்.

ஆசிரியர்: கே.பாலசுப்பிரமணி

20 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு ஊடகங்கள்,      காட்சி ஊடகங்களில் பத்திரிகையாளராக இயங்கியவர். வரலாற்று நிகழ்வுகள்,      கிராமம்,      நகர நாகரிகங்களை ஆய்வு செய்தல்,      சுற்றுச்சூழல் ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார்.

5. நூல்: அன்பே தவம்

 

அன்பு மயமான, அற வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு சக உயிர்களிடம் பரிவு காட்டி வாழ்ந்தாலே கடவுளின் கருணை நமக்குத் தானே கிடைக்கும் என்பதை அறிஞர்கள், ஆன்றோர், சான்றோர் வாழ்வின் மேற்கோள்களோடு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மிக அழகாக  விளக்குகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்கவேண்டிய அறநெறிகளை, அன்பின் வலிமையைப் பேசுகிறது இந்த நூல்.

ஆசிரியர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ஆழ்ந்த தமிழ்ப்பற்று, கணீர்க் குரல், துள்ளு தமிழ்ச் சொற்களோடு கேட்பவர்களை வசீகரித்துவிடும் பேச்சாற்றல், ஆன்மிகப் பணிகளோடு அறம் வளார்க்கும் சமூகப் பணி; அவசர காலங்களிலும், பேரிடர்க்காலங்களிலும் களத்தில் இறங்கிப் போராடும் போர்க்குணம் அனைத்தையும் ஒருங்கே பெற்றவர். ஆன்மிகத்தோடு தமிழ்ப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர்.

4. நூல்: ஆரோக்கியமே அடித்தளம்

நம் பாரம்பர்ய மருத்துவ முறையான சித்த மருத்துவம் பற்றிய விழிப்பு உணர்வு இன்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. நோய்களை நீக்கி நோய் மீண்டும் நம்மை அண்டாதபடி ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும் சித்த மருத்துவத்தின் பெருமைகளைச் சொல்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் நோய்களிலிருந்து சித்த மருத்துவம் மூலம் எப்படி காத்துக்கொள்ளலாம் என்கிறது இந்த நூல்.

ஆசிரியர்: கார்த்திகேயன்

இளம் மருத்துவர்.  சித்த மருத்துவத்தை வெகுஜன மக்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து பயணித்து வருகிறார். இயற்கை சார்ந்த சித்த மருத்துவக் கட்டுரைகளையும், சில ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

3. நூல்: தொழிலாளி டு முதலாளி

வீட்டில் இருந்துகொண்டே சிறு முதலீட்டில் தொழில் தொடங்கி அதை பெரும் அளவில் கொண்டு சென்று வெற்றியைப் பெற்று வருகின்றனர் பல மகளிர். வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக்கி தொழில்முனைவோர்களாகியிருக்கும் பெண்களின் வெற்றிக் கதைகளைக் கூறும் நூல். சாதிக்க நினைக்கும் பெண்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

ஆசிரியர்: கு.ஆனந்தராஜ்

எளிய மற்றும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை, தொழில்முனைவோர், வெற்றியாளர்களின் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சினிமா எனப் பன்முகத் தளங்களிலும் எழுதிவரும் இளம் பத்திரிகையாளர்.

2. நூல்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

சேமிப்பு என்றால் அதை வங்கியின் மூலம்தான் சேமிக்க வேண்டும் என்ற நிலை மாறி இன்று பெரும்பாலானோர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கின்றனர். பெரும் பணக்காரர்களால்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும் என்றில்லை. மாதம் 500 ரூபாய் கூட இதில் முதலீடு செய்யலாம் என்பது முதல்... மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அனைத்து விளக்கங்களையும் தருகிறது இந்த நூல். நிதித் துறையில் நீன்ட அனுபவம் பெற்ற இருவர் எழுதியுள்ள நூல்.

ஆசிரியர்கள்: .நாகப்பன், சி.சரவணன்

.நாகப்பன்

தமிழகத்தின் முன்னணிப் பங்குத் தரகர்களில் ஒருவர். மத்திய அரசின் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களுக்கு பங்குகளை வாங்கி விற்கும் குழுவில் இடம்பெற்றிருப்பவர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் மற்றும் பொருளாதாரவியல் துறைகளின் முதுகலைப் படிப்பிற்கான பாடத் திட்டக்குழு உறுப்பினரும் ஆவார்.

சி.சரவணன்

விஞ்ஞான விளையாட்டுகள் போன்ற கல்வி, அறிவியல், தொழில் சார்ந்த நூல்களை கடந்த 25 ஆண்டுகளாக எழுதி வருகிறார். விகடன் பிரசுரத்தில் 7 பதிப்புகளைக் கண்ட சேமிப்பு & முதலீடு தகவல் களஞ்சியம் உள்ளிட்ட பைனான்ஸ் தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார்.  

1. நூல்: சர்வைவா

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தான் இன்றைய உலகின் அனைத்துத் துறைகளிலும் அடித்தாடிக்கொண்டிருக்கிறது.. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றே இசையமைக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் சாத்தியம். எப்படிப்பட்ட ஆசிரியர் தங்களுக்கு வேண்டுமென பாடம் படிப்பவர்களே முடிவு செய்து தேர்ந்தெடுக்க முடியும் ஆச்சர்யத்தை நிகழ்த்தவுள்ளது செயற்கை நுண்ணறிவு. AI-ன் தாக்கம் இல்லாத துறை இருக்கப்போவது இல்லை என்பதாய் வளர்ந்து வருகிறது என்பதை உலகளாவிய ஆராய்ச்சிகளையும் அவற்றின் வளர்ச்சியையும் ஆதாரங்களாய் முன்வைத்து எழுதப்பட்ட நூல்.

ஆசிரியர்: அதிஷா

கடந்த பத்தாண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றிவருகிறார். பொறியியல் பட்டயப்படிப்பு முடித்து சில ஆண்டுக் காலம் மார்க்கெட்டிங் துறையிலும் சில ஆண்டுக் காலம் பதிப்பகம் ஒன்றிலும் பணிபுரிந்தவர். அந்தச் சமயத்தில் தன்னுடைய இணையதளம் வழியாக எழுதிக்கொண்டிருந்தவர்.

ஸ்ரீனி எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தின் பெயர், வித்தியாசமானது. காரணம் என்ன என்று புத்தகம் படித்தால் உங்களுக்கும் புரியும். டாரண்டினோவின் மிக முக்கியமான ஒரு திரைக்கதை முறை அது. பொதுவாகத் தற்செயல்களை ஒன்றுக்கு மேல் வைத்தால் அந்தப் படம் அலுத்துவிடும் என்றே திரைக்கதை வித்தகர்கள் சொல்வது வழக்கம். ஆனால் டாரண்டினோவின் படங்களில் சரமாரியாகத் தற்செயல்கள் இடம்பெறும். அவை அலுக்கவும் செய்யாது. இதைப்பற்றி டாரண்டினோவே பலமுறை பேசியிருக்கிறார். ‘திரைக்கதைகள் மூலம் ஆடியன்ஸை நான் நினைத்தபடி ஆட்டுவிப்பேன்’என்பதே அவரது தலையாய மந்திரம். அதை இன்றுவரை மிக வெற்றிகரமாகச் செய்தும் வருகிறார். அதைப்பற்றிய ஶ்ரீனியின் கருத்துகளைப் புத்தகம் எங்கும் காணலாம். இந்தப் புத்தகத்தை நான் எத்தனை வேகமாகப் படித்தேன் என்று சொல்லவே முடியாது. கடகட என்று, படுவேகமாகப் படித்துமுடித்துவிட்டேன். நீங்களும் அவசியம் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள். 

- கருந்தேள் ராஜேஷ்

இந்தப் புத்தகத்தில் இருக்கும் மூங்கிலைக் கொண்டாடிய குரங்குகள் கதையில் வரும் குரங்குகள் போலத்தான் ஒரு வகையில் நாம் இருக்கிறோம். இயற்கையின் அருமை புரியாமல், அழிக்கப் பார்க்கிறோம். உண்மையைப் புரியவைக்க பாண்டா கரடி போல ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிதான் இந்தப் புத்தகம். குரங்குகள் புரிந்துகொண்டன... நாமும் புரிந்து கொள்வோம் வாருங்கள்!

- கே. யுவராஜன், குழந்தைகள் எழுத்தாளர்

எல்லோரும் கால்களால் நடக்கக் கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். 

தொழில்நுட்பக் கருவிகளாலும் அவசர உலகத்தாலும் மனப்பாடம் செய்யும் கல்வியாலும் சுருங்கிப் போன குழந்தைகளின் உலகை ஆசுவாசப்படுத்த கதைகள்தான் ஒரே வழி. 

பாடப் புத்தகங்கள் கடந்த வாசிப்பைக் குழந்தைகளிடம் ஊக்குவிப்பதன் வழியே நல்ல ஆரோக்கியமான மன இறுக்கம் குறைந்த ஒரு பொருத்தப்பாடு உள்ள சமூகத்தைக் கட்டமைக்க முடியும். 

குழந்தைகளின் கைகளில் அவர்கள்  விரும்பும் புத்கங்களின் கனம் கூடக் கூட பூமியின் கனம் குறைந்து கொண்டே வரும் என்று நான் நம்புகிறேன். 

- பூவிதழ் உமேஷ்

கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக எழுவதுண்டு. 

 

அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் பொருட்டு தற்சார்பு வாழ்வியலில் இருக்கும் மேலாண்மைகளை நமக்குத் தெரிந்ததை, நாம் கற்றுக்கொண்டதை முடிந்தவரை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் என்கிற புள்ளியில் உருவானதுதான் இந்த 'சங்கிலி'.

- பறவை பாலா

நீராகாரம் பருகின மாதிரி சுகமான இந்த வட்டார வழக்குகள், கதைகளில் ஒலிக்கும்போது  எங்கிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் கமலதேவி என்று தேட வைக்கிறது. திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் எட்டிய கடைக்கோடி கொல்லிமலை அடியிலிருந்து உச்சிவரை எழும் இந்தக் குரல்கள் சிறுகதைக்குள் புதிது. அவர்கள் உலவும் நிலவெளியும் தான்.  கரிசலில் பாரததேவியிடம் இந்த ஒழுங்கை நான் வெகுவாகப் பின்தொடர்ந்திருக்கிறேன். பிறகு கமலதேவி அதைச் செய்திருக்கிறார் இந்தத் தொகுப்பில்...!

- எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி

காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ பெரியதோ எல்லாருக்குள்ளும் அவ்வன்முறை தலைதூக்கும். 

மூர்க்கம் கொண்ட ஒரு மனமேனும் தன்னை விட்டுப் பிரிந்த பெண்ணை உளமார ஆசிர்வதிக்குமெனும் நப்பாசை. அதனால் எழுதுகிறேன்.

- யாத்திரி

சிறுகதை  என்பது அனைவருக்குமே பிடித்தமான புனைவு வடிவம்.  ஒரு நெடுங்கதையோ, நாவலோ அளிக்கக் கூடிய  பாதிப்பை அதனினும் பல மடங்கு அளவில் சிறியதாக உள்ள படைப்பில் தருவதில் உள்ள சீரிய முயற்சி, நிகழ்வுகளின் நுட்பமான விவரிப்பு, அக வெளியின் உணர்வுச் சிக்கல்களைச் செறிவூட்டப்பட்ட மொழியில் கட்டமைத்தல், புனைவுத்தன்மை, மனதில் அது கடத்தும் பாதிப்புகள், துவக்கத்திலிருந்து இறுதி வரை வாசிப்பவர்களின் மனதை ஈர்த்து, ஒருமுக அவதானிப்பை நிலை நிறுத்துதல் எனச் சவாலுக்குரிய பல கூறுகளை உள்ளடக்கியது அவ்வடிவம். 

 

அப்படியானதொரு சீரிய வடிவத்தைத் தன் புனைவு வழியாகத் தேர்ந்தெடுத்திருக்கும் பிரவின் தனது முதல் தொகுப்பிலேயே இயன்றவரை அதற்கு நியாயம் செய்திருக்கிறார் என உறுதியாகச் சொல்ல முடியும்."

- எழுத்தாளர் லதா அருணாச்சலம்

பாட்டையா வகை எழுத்து அபூர்வமானது, தமிழுக்குப் புதிய வரவு. தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்ந்து, தமிழின் வேர்களை இழக்காது, பாட்டையா மாதிரி அரசியல், எழுத்து, சினிமா, நாடகம், பிரயாணம், கார்ப்பரேட் கல்ச்சர் ஆகியவற்றில் ஆழமான தன்னனுபவம் கொண்டவர் அரிது. அந்த அனுபவத்தை அவர் பாசாங்கு இல்லாமல், மிகவும் நேர்மையாகப் பதிவு செய்கிறார். 

-  பி.கே. சிவகுமார், ஆசிரியர், ‘வார்த்தை’

______

சிலருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பார்கள். அது முற்றிலும்  பாரதி மணிக்குத்தான் பொருந்தும். அவ்வளவு மனிதர்கள், அவ்வளவு சந்திப்புகள், அவ்வளவு பயணங்கள், அவ்வளவு பாடுகள் என அவ்வளவு பெரிய வாழ்க்கை ஒருவருக்கு வாய்ப்பது அபூர்வம். அது எல்லாமே அவரது சம்பாத்தியங்கள். ஆம், அவைதான் அவரது சம்பாத்தியங்கள். அது அவ்வளவும் இன்றைக்குத் தமிழ் வாசகனுக்கு அனுபவிக்கக் கிடைத்திருக்கிறது. 

- கவிஞர் கலாப்ரியா

ஆசிரியர் குறிப்பு

சிற்றிதழ்களின் மூலம் மொழியாக்கப் பணியைத் தொடங்கியவர். மலையாளத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2010இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தாய்மொழி மலையாளம். ஊட்டியில் வசிக்கிறார்.

Blurb

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போராளிகளில் ஒருவர் அய்யன்காளி. தாம் பிறந்த புலையர் இனத்தைத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப் போராடியதுடன் பேதமற்ற பொதுவான சமூகநீதிக்காகவும் அயராது சமர் புரிந்தவர். கல்வியினாலேயே பாரில் மேன்மைகள் எய்தலாகும் என்று உணர்ந்தவர்; உணர்த்தியவர். தீண்டத்தகாதவர்களுக்கு முதல் கல்விக்கூடத்தை உருவாக்கினார். பொதுவெளிகள் எல்லாருக்கு மானவை என்று அறிவித்தவர்; அதைச் செயல்படுத்தியவர். ‘வில் வண்டி சமரம்’ மூலம் சாதிய ஒடுக்குமுறைக்கு அறைகூவல் விடுத்தார்.

அய்யன்காளியின் சமூக நீதிப் போராட்டங்கள் இன்று கேரள வரலாற்றின் எழுச்சி தரும் பக்கங்கள். வெறும் சமூகநீதிப் போராளி மட்டுமல்ல; எல்லா உயிரும் ஒன்றென்று கருதிய ஆன்மிகவாதி. மானுட விடுதலைக்காகப் பாடுபட்ட அறிவுலகப் பகலவன். இன்று அவர் நவீன கேரளத்தின் ‘மகாத்மா’.

உணர்வூட்டுவதும் படிப்பினை அளிப்பதுமான அய்யன்காளியின் தன்னலம் துறந்த வாழ்க்கை வரலாற்றை விரிவான ஆய்வுக் குறிப்புகளுடனும் திருத்திச் சரிபார்க்கப்பட்ட தரவுகளுடனும் அரிய புகைப்படங்களுடனும் முன்வைக்கிறது இந்த நூல்.

ஆசிரியர் குறிப்பு

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்தின் இயற்கை கொஞ்சும் பசுமைகளில் அமைந்த சூலப்புரம் எனும் கிராமத்தில் உருமிக் கலைஞரான தாத்தா கந்தனின் மகன் பெருமாள் (பெண் வேடக் கலைஞர், நாதஸ்வரக் கலைஞர்) மாரியம்மாள் தம்பதியாரின் மகன் சிறு வயதிலே தாயையும் தந்தையும் இழந்தார். மூத்த அண்ணன் மகாலிங்கம் ராஜபார்ட் கலைஞர், இரண்டாவது அண்ணன் பிலாவடி கோமாளி வேடக் கலைஞர், மூன்றாவது அண்ணன் பாண்டி பெண்வேடக் கலைஞர் இரண்டு அக்காமார்கள் சுந்தரம்மாள் - பொன்னுச்சாமி, வள்ளியம்மாள் - ராமர், மனைவி அழகேஸ்வரி மதினிமார்கள் - வேலம்மாள், பாண்டிச்செல்வி, சித்ரா.

Blurb

சென்றாய பெருமாளின் வாழ்க்கை யதார்த்தமானது. ஏனென்றால் இந்தச் சமுதாய அமைப்பு விளிம்புநிலையில் வாழ வழியில்லாமல், வாய்ப்பில்லாமல் வாழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாய மரபில் பிறந்தவராகப் பிறப்பு அவதாரம் எடுத்துள்ளார். அவ்வாழ்வில் வளர்ந்து தன் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்று பல்வேறு திசைகளில் பறவைகளைப்போல பறந்து கொண்டு தன் முனைவர் பட்டம் வரை வரலாற்று பாடத்தில் பறந்திருப்பது, பிற்காலத்தில் வரும் சமுதாயத்தினர் எதிர்கொள்ள தன் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்குத்தானோ என்று இப்பொழுது தான் புரிகின்றது. இந்தப் படைப்பு படிப்பவர்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் ஒரு கூத்துக் கலைஞனின் குரலாகவும் ஒலிக்கும்.

ஆசிரியர் குறிப்பு

கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.    காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியர். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதை 2016இல் பெற்றவர். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

Blurb

‘இருப்பிலிருந்து இன்மைக்கும், இன்மையில் இருந்து இருப்புக்கும்’ இடையில் யாத்திரை நிகழும் நெடுந்தெருவின் மோதல்களத்தில் சுகுமாரனை நாம் இடைவிடாமல் சந்திக்கின்றோம். வாழ்க்கை குறித்த அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கும் -ஒன்றோடொன்று முரண்பட்டுக்கொள்ளும் -வெவ்வேறு கோணங்களிலிருந்து வாழ்க்கையைப் பரிசீலிக்கும் பலவித சித்தாந்தங்கள் அவர் கவிதைகளில் இடைவிடாமல் ஊடாடுகின்றன. அவை அவரது கவிதைகள் சிலவற்றில் கடவுளின் இறப்பைப் பிரகடனஞ் செய்ய, வேறு சிலவற்றில் ‘கடவுளைக்’ கடந்து உள்ளுறையும் ஒரு சித்தாகக் காண, இன்னும் சிலவற்றில் கடவுளை மலம் அள்ளுபவராக ஆக்கியுள்ளன. இந்த எந்தவொரு தனிச் சித்தாந்தக் கட்டுக்குள்ளும் சிக்காத, அவற்றை ஊடறுத்து அவர் செய்யும் யாத்திரைகள் அவரை ஒரு மெய்யான பயணியாகவும், ஒரு பரதேசிக்கான அடிப்படைகளைக் கொண்டவராகவும் ஆக்குகின்றன. ஆன்மீகம் என்பது சுயத்தை அதன் பல பரிமாணங்களிலும் புரிந்துகொள்ளும் பயணமாயின், சுகுமாரனின் கவித்துவ மூலத்தை ஆன்மீகம் என்று உரைக்க விரும்புவேன்.

ஆசிரியர் குறிப்பு

ஆ. இரா. வேங்கடாசலபதி (பி. 1967):

தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்துவருபவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக இருக்கும் இவர், மனோன்மணியம் சுந்தரனார் (திருநெல்வேலி), சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார்.

Blurb

திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரிய அக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுக்கும் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும்.ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில்...

ஆசிரியர் குறிப்பு

படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

Blurb

நகர வாழ்க்கையிலிருந்து தேவையானவற்றைத் தன்னோடு இருத்திக்கொண்டு, புதிதாக அமைந்த கிராம வாழ்க்கையில் தன்னை இரண்டறப் பொருத்திக்கொண்டு, நேரிட்ட பல சோதனைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தின் தாயை மாறாத சித்திரமாகக் காட்டுகிறது இந்நூல்.

ஆசிரியர் குறிப்பு

தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி யாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர்.

1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், நான்கு பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது.

‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப் பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

பதிப்பாசிரியர் குறிப்பு

கோவையில் பிறந்தார். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றினார். கவிஞர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர். தற்போது காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில், ஆங்கிலத்துறையில் விரிவுரையாள ராகவும், இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி, முதல்வராகப் பணி நிறைவு செய்தவர். துருக்கி நாவலாசிரியர் அஹமத் ஹம்தி தன்பினாரின்  ‘நேர நெறிமுறை நிலையம்,’ ஐஸ்லாந்து நாவலாசிரியர் ஹால்டார்லேக்ஸ்நஸின் ‘மீனும் பண் பாடும்’ ஆகியவற்றை இவர் மொழிபெயர்த்தவர். தவிர, மா ஜியான் எனும் சீன எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பான ‘நாக்கை நீட்டு’ எனும் நூலை இவருடைய மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. காலச்சுவடு, உன்னதம், அடவி ஆகிய பத்திரிகைகளிலும், கபாடபுரம் ஆகிய மின்னிதழ்களிலும் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன.

Blurb

கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஒரான் பாமுக்கின் கதையுலகம்.பாஸ்போரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால் அவரது எழுத்தின் சமகாலப் பொருத்தப்பாடு மிகுந்த முக்கியத்துவம் அடைகிறது.

உளவடுவை (trauma) கவிதையுடன் தொடர்புபடுத்தும் கருத்தமைவை முதன்முறையாகச் சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்வைத்தவர் பா. அகிலன். அந்த வகையில் சரமகவி எனும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபை உளவடுவுடன் இணைக்கும் இவரது இத்தொகுப்பு, அதன் தோற்றத்திலும் மொழியிலும் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகம் வெளிப்படுத்தும் போர் அனுபவங்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒரு தளத்தைக் கட்டமைக்கிறது.

பரிச்சயமான சொற்களையும் படிமங்களையும் உடைப்பதன்மூலம் இவருடைய குறுகத் தரித்த கவிதை மொழி உருவாகியிருக்கிறது. போரும், தொடரும் வன்முறைகளும் ஊடாடும் சமகால உலகக் கவிதைகளின் பிரத்தியேகமான, பன்முகத் தன்மை கொண்ட மொழியுலகுடன் இந்தக் கவிதை மொழி தன்னைச் சமாந்தரமாக அடையாளப்படுத்திக்கொள்கிறது.

இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பதிப்பு வெளியிடப்பட்டது.


ஆறு ஓவியர்கள், இரண்டு சிற்பிகள் இந்த நாவலுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் படைப்புகள் இந்தச் சிறப்புப் பதிப்புக்குப் பெருமை சேர்க்கின்றன.

ஷங்கர்ராமசுப்ரமணியனின் வாழ்க்கை குறித்த பார்வை, உள்ளே அருவவெளியில் திளைத்துக் காணாமல் போய்விடவில்லை. அதே சமயம் தினசரி வாழ்வின் ஆழமற்ற தன்மையில் தொலைந்துபோய்விடவும் இல்லை. உணர்ச்சிகளின் பாய்ச்சலிலும் சுழிகளிலும் சிக்கிக்கொண்டுவிடாமல், கரையுடைந்து கட்டற்றுப் போய்விடாமல், உள்ளார்ந்த சமநிலையுடன் ஆழமாகவும் சீராகவும் ஓடுகின்றன இந்தக் கவிதைகள். 

வாசிக்கும்போது மனத்தில் சலனத்தை உண்டாக்கி, அந்தச் சலனத்தின் அசைவில் வேறு ஒரு தளத்தை அடைந்து, கவிதை முடியும்போது வேறொரு அமைதியை வந்தடைகின்றன ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகள். தன்னுடன் தானே மேற்கொள்ளும் உரையாடலாக இருப்பினும் வாசகனுக்குள்ளேயும் அவன் தன்னுடன் தான் அனுபவம் கொள்ளும் உரையாடலாக மடைமாற்றம் கொள்கின்றன இந்தக் கவிதைகள்.

-ஆனந்த்

ஆசிரியர் குறிப்பு:  புலியூர் முருகேசன் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவராகப் பணியாற்றி வருகின்றார். பல சிறு புதினங்களை எழுதியுள்ளார்.

நூல் குறிப்பு: கிராமப்புறப் பகுதிகளின் சாதியக் கொடுமைகள், கூலி உயர்வுப் போராட்டங்கள் ஆகியவற்றிற்கு முகம் கொடுத்து களப்பலியான தோழர்களைப் பற்றிய நாவல் 

ஆசிரியர் குறிப்பு:  65 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர். திருப்பூரில் வசித்து வருகிறார். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.   

நூல் குறிப்பு: மனித உரிமைகளை மதிக்காத சட்டங்களை கொண்ட நாடுகளில் புலம் பெயர்கிறவர்களின் அவலங்களையும் அவர்களை சுற்றியுள்ள அபாயங்களையும் யதார்த்தத்தோடு விவரிக்கும் நாவல் 

ஆசிரியர் குறிப்பு:  எழுத்தாளர் பாட்டாளி அரசியல் சார்ந்து பல்வேறு படைப்புகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதுவரை  எட்டு நூல்கள் வெளிவந்துள்ளன. கீழைத் தீ நாவலுக்காக சிறந்த நாவலுக்கான பரிசையும் வென்றுள்ளார்.   

நூல் குறிப்பு: வெண்மணி சம்பவத்தை அடுத்து கீழ் வெண்மணியில் நடந்த தாக்கத்தையும் எழுச்சியையும் வர்க்க கண்ணோட்டத்தோடு கூறுகின்ற நாவல்

ஆசிரியர் குறிப்பு:  கோழிகோடு மாவட்டத்தை சேர்ந்த வெள்ளியோடன் பல சிறந்த மலையாள சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தற்பொழுது ஷார்ஜாவில் பணிபுரிந்து வருகிறார்.   

நூல் குறிப்பு: மனிதனின் ஆழ்மனத்தின் எண்ணங்களை ஊடுருவி ஆராயும் வகையில் கதைகளைக் கொண்ட அரசியல் ரீதியான மொழிபெயர்ப்பு தொகுப்பு.

ஆசிரியர் குறிப்பு: சபீனா எம். சாலி எர்ணாக்குளம் பகுதியை சேர்ந்த பெண் எழுத்தாளர். பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தற்பொழுது சவூதி அரேபியாவில் பணி செய்து வருகிறார்.   

நூல் குறிப்பு: வயிற்றுப்பிழைப்பிற்காகப் பிறந்த நாட்டைவிட்டு இடம்பெயர்ந்து அயல்நாடுகளுக்கு வாழ வருபவர்களின் கஷ்டங்களை, கண்ணீரை உப்புச்சுவையுடன் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் குறிப்பு: திருப்பூரைச் சார்ந்த திருப்பூர் குணா சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் சமூக அவலங்கள் குறித்தும் கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார்.   

நூல் குறிப்பு: தேர்தல் நிபுணத்துவம் என்கிற பெயரில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் நூல்.

ஆசிரியர் குறிப்பு: கூடலூரை சேர்ந்த எழுத்தாளரான மு.சி.கந்தையா அவர்களின் பல கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மலையகத் தமிழரான இவர் அம்மக்களின் வாழ்வை குறித்து எழுதிய முதல் நாவல் இது.  

நூல் குறிப்பு: பத்தொன்பதாம் நூற்றாண்டு (1817-களின்) தொடக்கம் முதல், தமிழகக் கிராமங்களிலிருந்து, காலனிய நாடுகளுக்கு "கூலிகள்" என்ற அடையாளப்படுத்துதலுடன் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருநூறு ஆண்டுகள் (2017 சனவரி) நிறைவின் நினைவாக வெளிவந்த நூல்.

ஆசிரியர் குறிப்பு: யாழினிஸ்ரீ கோவையை சார்ந்த பெண் படைப்பாளர். சிறு வயதிலேயே உடல் பாகங்கள் அனைத்தும் செயலிழந்தும் விடாமுயற்சியாய் எழுதி வருகிறார். இது அவரது முதல் தொகுப்பு. 

நூல் குறிப்பு: .சமூகம் சார்ந்த, வாழ்வியலையும் மன வலிகளையும் வாழ்வின் அழகியலையும் சுமந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு

நூல் குறிப்பு: கடினமான போராட்டத்தில் பொருளாதார பிரச்சினைகளும் அவற்றுக்கு சரியான தீர்வும் கண்ட தோழர் ஜெ.வி.ஸ்டாலின் அவர்களின் உரைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கடிதங்கள் அடங்கிய புத்தகம். இந்த மதிப்புமிகுந்த புத்தகத்தை  தமிழில் மொழிபெயர்த்தவர் தோழர் சுந்தர சோழன்.

ஆசிரியர் குறிப்பு: எஸ். அருள்துரை (எஸ் அ)  சமூக சிந்தனை நிறைந்த எழுத்தாளர். மேலும் சில கட்டுரை நூலகள் எழுதியுள்ளார். இயற்கையின் மேல் அக்கறைக் கொண்டவர் இயற்கை வாழ்வாதாரத்தை அதிகம் நேசிப்பவர். 

நூல் குறிப்பு: நம் நாட்டின் இயற்கை வளங்களின் இன்றைய நிலையை சுட்டிக்காட்டுவதுடன் இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளையும் அதை களைய நாம் கையாள வேண்டிய வழிமுறைகளையும் இந்நூல் சுட்டுகிறது.

ஆசிரியர் குறிப்பு: ஜீவா நாகர்கோவிலை சேர்ந்த பெண் எழுத்தாளர். நிகழ்கால பெண்ணிய பிரச்சனைகளை எழுதி வருகிறார். இது இவரது நான்காவது புத்தகம், இரண்டாவது நாவல். 

 

நூல் குறிப்பு: பெண்களின் மேல் சமூகத்தால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் பற்றியும் சமகால பாசிச ஆட்சிமுறை குறித்தும் விவரிக்கும் நாவல் 

திருஞானசம்பந்தர் அவதரித்த பிரமபுரம் எனும் சீர்காழி திருத்தலம் குறித்த முழு வரலாறும் விவரங்களும் அடங்கிய நூல். அண்மையில் தேஜஸ் அமைப்பின் சிறந்த ஆன்மீக நூலுக்கான பரிசைப் பெற்றுள்ளது.

பதிப்பாளர்: காந்தளகம், 68, அண்ணா சாலை, சென்னை 600002. 0091-44-28414505, www.tamilnool.com, tamilnool@tamilnool.com.

உலகெங்கும் தமிழரின் வரலாற்றுப் பயணங்களைச் சுட்டும் உலகப் படம், தமிழ் அளவை முறைகள், தமிழ் எண்கள், உலக நாடுகள் குறித்த முழு விவரமும் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழரின் தோராயமான தொகையும், ஐ. நா. சபை குறித்த முழு விவரங்கள் எனப் பொது அறிவுப் பெட்டகமாக விளங்கும் படைப்பு.

பதிப்பாளர்: காந்தளகம், 68, அண்ணா சாலை, சென்னை 600002. 0091-44-28414505, www.tamilnool.com, tamilnool@tamilnool.com.

பாடல் பெற்ற ஈழத்துத் திருத்தலமான திருக்கேதீச்சரத்தின் முழுமையான வரலாறு, இன்றைய நிலை, தொடர்புடைய திருமுறைப் பாடல்கள் அனைத்தும் இத்தொகுதிகளில் அடங்கியுள்ளன.

பதிப்பாளர்: காந்தளகம், 68, அண்ணா சாலை, சென்னை 600002. 0091-44-28414505, www.tamilnool.com, tamilnool@tamilnool.com.

சுகாவின் எழுத்துக்களை வாசிக்க கண்களை இடுக்கி, புருவத்தை நெறித்து க்ரூப்-1 தேர்வுக்கான மாணவனைப் போல் தயாராக வேண்டியதில்லை. வெள்ளிக்கிழமை மாலைகளில் சிலேட்டுப் பையோடு வீடு நோக்கி துள்ளிக் குதித்தோடும் எளிய மாணவனாக இருந்தால் போதும்.

புன்னகையும் கண்ணீரும் கலக்கும் வினோத நறுமணங்களால் ஆன திருநெல்வேலியின் தெருக்கள், மனிதர்கள், எல்லாவற்றையும் நட்பும் குறும்புமாக பதிவு செய்யும் இவரது எழுத்துக்குள் புகுந்தால் குறுக்குத்துறை ஆற்றில் இறங்கிவிடலாம்.

திரைப்பட இயக்குநரான சுகா இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவர்களுள் முக்கியமானவர். சுகா எழுதிய இசைக்கட்டுரைகள் மிகவும் நுட்பமானவை. எளிமையின் கைகளால் நெஞ்சைப் பற்றிக்கொள்பவை.

பாபநாசம் திரைப்படத்தின் வட்டார வழக்கு இவரது பங்களிப்பு. தூங்காவனம் திரைப்படத்தின் வசனகர்த்தா. ‘வார்த்தை’ சிற்றிதழில் எழுதத் துவங்கிய சுகா இதுவரை எழுதிய புத்தகங்களின் வரிசையில் இப்போது ஐந்தாவதாக இந்த ‘வேணுவனவாசம்.’ ஆறு கட்டுரைகளும், ஆறு சிறுகதைகளும் கொண்ட இப்புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தை அமரர் கிரேஸி மோகனின் வார்த்தைகளில் சொன்னால், ‘பரமசுகா.’ 

அறிவியல் சொல்லும் உண்மைகளுக்கும் நிஜமான முற்போக்குக் கருத்துகளுக்கும் நான் நிச்சயம் எதிரி அல்ல. அவை தேவையானவைதான். ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் என்ற ஒன்று உண்டு என்ற மனப்பான்மையை ஊட்டக் கூட மறுக்கும் போக்கையே நான் கண்டிக்க முயல்கிறேன். அதேபோல் நாட்டுப்பற்று, கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஆக்கப்படும் போக்கையும் எதிர்க்கிறேன். இவையே என் சிறுவர் கதைகளுக்கான அடிப்படை. 

நம் மரபில் இத்தகைய மூத்தாப்பாட்டிகள் குடும்பம் தோறும் வீடுதோறும் வீதிகள்தோறும் இருந்தார்கள். நம் மரபான கதைகள் எல்லாம் பிற்போக்கு என்ற எண்ணம் ஆழ மீள மீள விதைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புயலில் நம் மரபான கதைசொல்லிப் பாட்டிகள் கிட்டத்தட்ட அழிந்த இனமாகி விட்டார்கள். இக்கதை முறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் முக்கியமானது. இதுவே நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும். 

மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/ மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம். 

- ஹரன் பிரசன்னா  

அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது. 

வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே! சோம பானம் என்பது சாராயம்! திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்! சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்! வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது! இவை போன்ற போலிக் கட்டுமானங்களை இந்த நூல் உடைக்கிறது.

அதேநேரம் வேத காலம் எப்படி இருந்தது? வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன? வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா? வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்? இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.