Enable Javscript for better performance
தொடங்கிவிட்டது சென்னை புத்தகக் கண்காட்சி 2016!- Dinamani

சுடச்சுட

    

    தொடங்கிவிட்டது சென்னை புத்தகக் கண்காட்சி 2016!

    By DIN  |   Published on : 02nd June 2016 12:23 PM  |   அ+அ அ-   |    |  

    405c0546b627819ede1cde9f90a355d3

    405c0546b627819ede1cde9f90a355d3

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி)  இணைந்து நடத்தும் 39-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவு திடலில் நேற்று (ஜூன் , 2016) நல்லி குப்புசாமி தொடக்கி வைக்க, துவங்கியது.  

    சென்னையின் அடையாளமாகிவிட்ட சில விஷயங்களுள் வருடா வருடம் டிசம்பர் தொடங்கி ஜனவரியில் முடியும் புத்தகக் கண்காட்சியும் ஒன்று. மக்கள் பெரும் திரளாக வந்து தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச் செல்வது வழக்கம். பத்து நாட்கள் திருவிழாவாகவே நிகழும் இப்புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு பெய்த கனமழை வெள்ளத்தால் தள்ளிப்போடப்பட்டது. ஜூன் 1 முதல் 13-ம் தேதி வரையில் பத்து நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி புத்தக ஆர்வலர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் எப்போதும் சற்று மந்தமாகத் தான் இருக்கும். விற்பனையாளர்களின் கவனம் முழுக்க புத்தக அரங்கை ஒழுங்குபடுத்துவதும் புத்தகங்களை அடுக்கி வைப்பதுமாக இருக்கும். முதல் நாள் வரும் சிறு கூட்டம் மீடியா மற்றும் ஃபேஸ்புக் எழுத்தாளர்களாகத் தான் பெரும்பாலும் இருக்கும்.

    கோடையின் வெப்பம் தொடரும் நிலையில் தீவுத்திடல் உலைகளன் போல் கொதித்தது. சூடும் வெப்பமும் சூழலை கடுமையாக மாற்றியிருக்க பதிப்பாளர்கள் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்குள் சோர்வடைந்துவிட்டார்கள். ’புலம்’ பதிப்பாளர் லோகநாதனிடம் பேசிய போது ‘இந்த வருடம் தாமதமாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றாலும் நிச்சயம் மக்கள் இடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ஜூன் மாதம் பள்ளி திறக்கம் சமயம், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பிஸியாக இருப்பார்கள் என்ற போதிலும் புத்தகம் வாங்க சரியான சமயம் இதுதான். அதனால் நிச்சயம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள். கடந்த வருடம் நந்தனம் YMCA வில் நடைப்பெற்றது. இந்த வருடம் தீவுத் திடலில் நடைபெறுகிறது. இந்த இடமாற்றம் நிச்சயம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. செண்ட்ரல் மற்றும் பீச் ஸ்டேஷன்களில் அருகில் இருப்பதாலும் ஏற்கனவே மக்கள் சுற்றுலா பொருட்காட்சிக்கு வந்து பழக்கப்பட்ட இடமாததால் வந்துவிடுவார்கள். தவிர புத்தகக் கண்காட்சியைப் பொருத்தவரையில் அது சென்னையில் எந்த பகுதியில் நடைபெற்றாலும் மக்கள் ஆர்வமாக வந்து கலந்துகொள்வார்கள். தவிர சில நிகழ்ச்சிகளும் இந்த வருடம் புதிதாக நடைபெற உள்ளது.  எழுத்தாளர்களுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

    கிழக்கு பதிப்பகம் நியூ ஹோரிசான் மீடியா அரங்கைக் கடந்து போது அதன் நிர்வாக அலுவலர் ஹரன் பிரசன்னாவை சந்தித்த போது அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பயனுள்ளவை. ‘இந்த முறையும் புத்தகக் கண்காட்சியில் மக்கள் அதிக அளவு பங்குபெற்று சிறப்பித்துவிடுவார்கள் என்று நம்புகிறோம். வெயிலின் தாக்கத்தால் சூடு அதிகமாக இருப்பதால் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தருவோர் தவறாமல் தண்ணீர் பாட்டில்கள் அல்லது மோர் அல்லது ஜூஸ் கொண்டு வருவது நல்லது. இந்த வருடம் விடுமுறை தினங்கள் குறைவாக உள்ளது. நான்கு தினங்களே விடுமுறை தினங்கள் எனவே கூட்டம் அந்த நாட்களில் அதிகமாக இருக்கும். ஜனவரி மாதம் நடைபெற்றிருந்தால் பொங்கல் விடுமுறையையும் சேர்த்து ஆறு நாள்கள் கிடைத்திருக்கும். குறைந்த விடுமுறை நாள்களில் மக்களின் வருகை எப்படி இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

    கிட்டத்தட்ட 700 அரங்குகளி்ல் 10 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணகான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியில் சுமார் 6 ஆயிரம் புதிய புத்தகங்களும், சுமார் ஒரு லட்சம் நூல்களும் இடம் பெறவுள்ளன. பார்வைத் திறன் குறைபாடுடையவர்களுக்கான பிரெய்லி நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர புலம் பெயர்ந்த தமிழர்களை சிறப்பிக்கும் வகையில் சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கென்று தனி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், கன்னட நூல் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி எழுத்தாளர்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள எழுத்தாளர்களும் கவுரவிக்கப்படுகின்றனர். தினமும் மாலையில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கட்டுரை, ஓவியம், குறும்படப் போட்டிகள் நடத்தப்படும். ஓவியப்பயிற்சி பட்டறையில் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளிக்கப்படும். தினசரி குறும்படங்கள் திரையிடப்படும். மாடித் தோட்டம் குறித்த அரங்கு, உணவுத் திருவிழா, ஓவியம், இசை, சார்ந்த போட்டிகளும் நடைபெறும்.

    புத்தகக் கண்காட்சியை தினமும் மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிடலாம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்குத் துவங்கும். பெரியவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.10/- .பனிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

    அறிவுலகை நோக்கிய பயணம் நமக்கு வெகு அருகில். புறப்படலாம் புத்தகக் கண்காட்சிக்கு!

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp