Enable Javscript for better performance
"சிறப்புக் குழந்தைகள் நலன் காப்பதில் தமிழகம் முதலிடம்'- Dinamani

சுடச்சுட

    

    "சிறப்புக் குழந்தைகள் நலன் காப்பதில் தமிழகம் முதலிடம்'

    By kirthika  |   Published on : 27th May 2016 09:52 AM  |   அ+அ அ-   |    |  

    மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகள் நலன் காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் வி.கே. ஜெயக்கொடி தெரிவித்தார்.

    மதுரம் நாராயணன் மாற்றுத் திறன் குழந்தைகள் மையத்தின் 4-வது சர்வதேச மாநாடு மற்றும் 10-வது தேசிய கருத்தரங்கம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டு நிறைவு விழாவில், மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் வி.கே. ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநாட்டின் முடிவில், மாற்றுத் திறன் குழந்தைகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆரம்ப கால சிகிச்சை மற்றும் கண்டறிதல் முறைகளில் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் கொண்டு வரவேண்டும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கும் இந்த வசதிகள் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும், மரபு சார்ந்த கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டன.

    பின்னர், ஆணையர் வி.கே. ஜெயக்கொடி பேசியதாவது: மாநாட்டின் முடிவில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இப்போது சிறப்பு குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆரம்ப கால சிகிச்சை மற்றும் கண்டறிதல் நடவடிக்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    ஆரம்ப கால கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள, 32 நடமாடும் மையங்களை தொடங்க நாட்டிலேயே முதன்முறையாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வாகனங்கள் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

    மனவளர்ச்சி குன்றிய 1 லட்சம் பேருக்கு மாதம் ரூ. 1,000-த்தை உதவித்தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. மேலும் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற நிதியுதவியும் அளிக்கப்படுகிறது என்றார் அவர். விழாவில் மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஜெயா கிருஷ்ணசாமி, மனநல மருத்துவர் மற்றும் சிறப்புக் கல்வியாளர் பி. ஜெயச்சந்திரன், மையத்தின் ஆலோசகர் எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp