Enable Javscript for better performance
இவர் ஒரு புதிய ஷம்மி கபூர்- Dinamani

சுடச்சுட

    
    16slid2

    ஷம்மி கபூர் டைரக்ட் செய்ய விரும்பினாலும் இன்றைய பண்பாடற்ற, நாகரிகமற்றவைகளைப் போல் அல்லாமல் நல்ல படங்களைத் தர முடியும் என்று எண்ணினாலும், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கால்ஷீட் கொடுக்கும் கலைஞர்களையும், அவசர போக்கையும் தீயதை விரும்பும் மனப்பாங்கையும் வைத்துக் கொண்டு தரமான படங்களை டைரக்ட் செய்ய முடியாது என்ற எண்ணம் கொண்டிருக்கிறார். ஆயினும் நடிப்பதில் ஷம்மி கருத்தைச் செலுத்துகிறார்.

    தயாரிப்பாளர்கள் கொண்டு வருகிற பாத்திரங்களை எல்லாம் நான் எடுத்துக் கொள்வதில்லை. எனக்குப் பிரியமானவர்களிடத்திடமே நான் பணி புரிகிறேன். முதலில் நான் ஒரு நடிகன். ஜங்லியில் சைரா பானுவின் காதலனாகவும், ஜமீரில் அவருக்குத் தந்தையாகவும் நடிக்க முடிந்தவன் நான். எந்த ஒரு நல்ல நடிகரும் பொறுத்தமான பாத்திரங்களையே ஒப்புக் கொள்வார்கள்’ என்று கூறும் ஷம்மி, நடிக்கப் போகும் பாத்திரங்களுக்காக இன்னும் ஹோம் ஒர்க் செய்து கொள்கிறார்.

    இப்பொழுதெல்லாம் ஷம்மி கபூர் பூஜையில் வெகு நேரத்தைச் செலவிடுகிறார். படிப்பதிற்கும் நேரத்தை ஒதுக்குகிறார். நல்ல இசையைக் கேட்கிறார். தானாகவே செஸ் விளையாடுகிறார். நேரம் கிடைக்கும் போது மனைவி, மக்களுடன் பொழுதைக் கழிக்கிறார். ஷம்மியின் மகன் மிக்கி, தன் பெரியப்பா ராஜ்கபூரிடம் உதவியாளராக இருக்கிறார். மகனுடைய எண்ணத்திற்கு எந்தவித கட்டுப்பாடும் தடையும் விதிப்பதில்லை ஷம்மி.

    ஷம்மி கபூர் சற்று உலர்ந்திருக்கும் முடியின் மீது (ஒரு நேரத்தில் எவ்வளவு வசீகரமான முடி அவரிடம் இருந்தது!) தன் கரங்களை மெதுவாகப் படரவிட்டுப் பின்நோக்கி நகர்த்தியவாறு, பழைய நினைவிற்குச் செல்கிறார்.

    ‘எல்லா நேரத்திலும் எல்லாமே நீடித்திருக்க முடியாது. வெற்றி, புகழ், பிரகாசம், இளமை இவையெல்லாம் என்றைக்கும் ஒன்றுமில்லாதவையே. எனக்குச் சென்றவை எல்லாம் இன்னமும் அழகான அம்சமாகத் தோன்றுகிறது. என்னைப் பற்றி நினைக்கும் போது எனக்கே பொறாமையாக இருக்கிறது. நான் உண்மையிலேயே என் உள்ளத்திற்காகவே வாழ்ந்தேன்.

    இளமைப் பருவம் என்பது வாழ்க்கையில் இனிமையான பிரகாசமான காலமாகும். எனக்கு அது ஒரு மாபெரும் வன போஜனமாக இருந்தது. என் வாழ்க்கையின் சகல அம்சங்களையும் நான் வாழ்ந்து அனுபவித்திருக்கிறேன். இப்பொழுது என்னிடம் இளமை இல்லை. ஆனால் என்னிடம் வருத்தம் இல்லை. நான் திருப்தியோடிருக்கிறேன். பாபாவின் ஆசிகளுடன் எதிர்காலத்தில் ஒரு நல்ல வாழ்க்கைக்குத் தலைமை தாங்குவேன் என்று உறுதியுடன் நம்புகிறேன்.

    -ரிஷி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai