Enable Javscript for better performance
மறக்க முடியாத நிகழ்ச்சி!: எஸ்.பி.பாலசுப்ரமணியம்- Dinamani

சுடச்சுட

    
    s-janaki_1_1401893718

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. 1965-ஆம் வருடம் பாடகி எஸ்.ஜானகி அவர்களைச் சந்தித்தது தான். கூடூரில் காளிதாச கலாநிகேதன் என்று ஓர் அமைப்பு இருந்தது. 1965-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா. அதில் நான் பாடி இரண்டாவது பரிசு வாங்கினேன். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திருமதி எஸ்.ஜானகி அவர்களும், இசையமைப்பாளர் வேணு அவர்களும் வந்திருந்தனர். முதல் பரிசு வாங்கிய பையனையும் என்னையும் பாடச் சொன்னார்கள். இரண்டு பேரும் தனித் தனியாகப் பாடி முடித்ததும் ஜானகி சிறு ரகளை செய்து விட்டார். ‘இரண்டாம் பரிசு வாங்கின பையன் தான் நன்றாகப்பாடினான். அவனுக்குத்தான் முதல் பரிசு தந்திருக்க வேண்டும்’ என்றார். மற்றவர்கள் அவரைச் சமாதானம் செய்தார்கள். ஆனால் ஜானகி திருப்தியடையவில்லை. என்னைப் பார்த்து, ‘மெட்ராஸ் வாப்பா. வந்து முயற்சி பண்ணினால் உனக்கிருக்கும் திறமைக்கு பெரிய பாடகனாகலாம்’ என்றார். அப்படி அவர் சொன்னதும் என் உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளியது.- எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai