சுடச்சுட

  

  கலைச்சேவை, அது இதுங்கறதெல்லாம் நம்ப முடியல!

  By கார்த்திகேயன் வெங்கட்ராமன்  |   Published on : 12th August 2016 03:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jayamalini

  "டாக்டர் சிவா" படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி குறைந்த வருடங்களில், 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அல்லது நடனமாடி, அப்பா! எவ்வளவு பெரிய சாதனை இது?

  தி.நகர் சாரி தெருவில் அதே பழைய வீடு, அதே பழைய ஜெயமாலினி அவரிடம் இந்த கேள்வியை கேட்ட பொழுது புன்னகைத்தார். .

  "சாதனையா..ம்ஹூம்ம்.. இல்லீங்க..அந்த எண்ணமே இன்னும் வரல.உள்ளுக்குள்ள ஆசைய அடக்கி வெச்சு வெச்சு , ஒரு நாள் பட்டுத் தெறிச்சு சிதறி விடுதலை கிடைச்சாப்பல, ஒரு வசதியான சவுகரியமான க்ஷணத்துல நான் நடிகையாகிட்டேன். நடிகையா என்னை ரெகக்னைஸ் பண்றது பெரிய விஷயம். அதுக்கு குடுத்து வச்சிருக்கணும்.

  இந்த வெற்றிக்கு எது அடிப்படையா இருந்தது ?

  பணம் சம்பாதிக்கணுங்கிற பரப்புதான். வேற என்ன? பணம் சம்பாதிக்கணும்னுதான் எல்லாரும் இந்த பீல்டுக்கு வராங்க. கலைச்சேவை, அது இதுங்கறதெல்லாம் நம்ப முடியல.உண்மையாவே நம்ப முடியல. . அபப்டிச் சொல்றவங்க பேச்சுல ஒரு பொய் தோணுது எனக்கு.

  ஏன் தமிழ்ல அதிகமா உங்களால் படம் பண முடியல?

  என்னால முடியாதது எதுவும் இல்ல. நான் என்னமோ வேண்டாம்னு விலகிப் போற மாதிரி எல்லாரும் நினைச்சுக்கறாங்க. பட் , ஒரு நல்ல கேரக்டர் ரோல் தர யார் தயாரா இருக்காங்க? இத ஒரு சவாலாவே சொல்றேன்.

  சென்சார் போர்டு அவசியம்னு தோணுதா உங்களுக்கு?

  நிச்சயமா. கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கறப்பவே வேணும்னு திணிக்கிற சீன்ஸ் நிறைய..அதுவும் இல்லனா அவ்ளோதான். இல்லேனா நான் கொஞ்சம் சிரமப்படுவேன். இன்னும் கொஞ்சம் போல்டர பண்ணுமாங்கிற தொந்தரவெல்லாம் வரும்.

  இப்படி வாழ்க்கையெல்லாம் ஆடிக்கிட்டு, ஆடறதே வாழ்க்கையாகிட்டா என்ன பண்ணுவீங்க?

  வாழற வரைக்கும் ஆடிக்கிட்டிருப்பேன். என் தொழில் நான் செய்யுறேன். உங்களுக்கு ஒரு வயசுல ரிட்டயர்மெண்ட் வருதில்லயா? அது போல் என்னால் ஆட முடியாத நிலை வர்றப்ப, எனக்கு மூச்சிரைக்கிறப்போ நிறுத்திடுவேன்.

  உங்கள பாத்தா பரிதாபமா இருக்கு எனக்கு.

  பரிதாபப் பார்வை பார்க்க நான் காட்சி பொருள் இல்லை. இன்னிக்கு என்னோட அந்தஸ்த்து என்ன? சோசியல் ஸ்டேட்டஸ் என்ன? இருபத்தோரு வயசுல நான் சம்பாதிச்சத நீங்க சம்பாரிக்கணும்னா எத்தனை வருஷம் ஆகும்?

  டான்ஸ் மாஸ்டர் ஆடிக் காட்டுற மூவ்மென்ட்ஸை அபப்டியே செயயப் போறீங்க. இதுல சாதனைனு என்ன இருக்கு?

  நடிக்கிறத விட டான்ஸ் ஆடுறது ரொம்ப கஷ்டம். டான்ஸ் மாஸ்டர் ஆடிக்காட்டுவாரு வாஸ்தவம். அத்துப்படி ஒரு நிமிஷம் கூட உங்களால் ஆட முடியாது. ஜஸ்ட் உணர்ச்சிகளை ஒருங்கிணைச்சு பண்ற விஷயம் இல்ல இது. உடம்போட ஓவ்வொரு நரம்பும் ஆடணும்.

  ஜனங்களோட அபிமானத்த பாக்கும் போது . இத்தனைக்கும் ஆதாரமா நமக்கு என்ன யோக்கியதையிருக்குனு தோணாதா?

  நிச்சயமா தோணும். பட் உள்ளுக்குள்தான். வெளில காட்டிக்கிறதைல்லை.

  சந்திப்பு: உத்தமன்

  படங்கள்: லில்லியன்.

  (சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai