Enable Javscript for better performance
திரைக்கதை பயன்படுத்தப்பபடாமல் தடுத்த இடைத்தரகர்கள்!- Dinamani

சுடச்சுட

    

    திரைக்கதை பயன்படுத்தப்பபடாமல் தடுத்த இடைத்தரகர்கள்!

    By கார்த்திகேயன் வெங்கட்ராமன்  |   Published on : 12th August 2016 04:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kanandasan

    கண்ணதாசன் தொடர்

    1947-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திய 'சண்ட மாருதம்' பத்திரிகையில் நான் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது வயது எனக்கு 20. மிக அமைதியான வாழ்க்கை.

    125 ரூபாய் சம்பளத்தில் அன்றிருந்த நிம்மதி இன்று இல்லை.

    சேலத்தில் அமைதியான சூழ்நிலையியில் எங்களுக்கு என ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் நாங்கள் மூவர்தான் தங்கி இருந்தோம்.

    ஒருவர் முக்தா பிலிம்ஸ் சீனிவாசன். மற்றொருவர் அவரது சகோதரர் ராமசாமி. அவர்கள் இருவரும் மாடர்ன் தியேட்டர்சில் டைப்பிஸ்ட்டுகள்.

    எனக்கென ஓரு மானேஜர், ஒரு குமாஸ்தா, ஒரு ஊழியர் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.

    நான் போய்ச் சேர்ந்த சில மாதங்களில் திரைக்கதை எழுதும் வாய்ப்பை திரு டி..ஆர்.எஸ் கொடுத்தார். முதன்முதலில் ஆதித்தன் கனவு என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினேன். அங்கிருந்த இடைத்தரகர்கள் அது பயன்படுத்தப்பபடாமல் தடுத்து விட்டார்கள். நகைச்சுவைக்கு காட்சிகள் மட்டும் சில பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

    பிறகு மாயாவதிக்கு எழுதினேன்.அதுவும் பயன்படுத்தபபடவில்லை.

    மாதச் சம்பளத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்த பொழுது சில வேடிக்கைகள் நிகழ்ந்தன, மாடர்ன் தியேட்டர்ஸுக்கு ஒரு ஹாஸ்டல் உண்டு. நாட்டிய நடிகைகள் அங்கேதான் தங்கியிருப்பார்கள். அவர்களது அறையில்தான் போய் பேசிக் கொண்டிருப்பேன். அந்த அறைக்கு அடுத்த அறைதான் என்னுடையது.

    யார் அப்படி நடந்தாலும் சீட்டுக் கிழிந்து போகும். என்னை பற்றி தயாரிப்பு நிர்வாகி எம்.ஏ .வேணு முதலாளியிடம் நிறைய ரிப்போர்ட் கொடுப்பார்.

    முதலாளி உடனே இரண்டு அறைகளுக்கும் நடுவே உள்ள கதவை ஆணி வைத்து அறைய சொல்லி விட்டார்.

    மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து நான் விலகிய பதினைந்தாம் நாளே எனக்கு தந்தி கொடுத்து வரச் சொன்னார் டி .ஆர்.எஸ். அப்போது டால்மியாபுரம் வழக்கில் நான் அலைந்து கொண்டிருந்தேன். அதற்குப் பணமும் கொடுத்தார்.

    நான் புகழ் பெற பெற மாடர்ன் தியேட்டர்ஸுடன் நெருக்கம் இன்நும் அதிகமாயிற்று.

     

    (சினிமா எக்ஸ்பிரஸ் 01.07.81 இதழ்)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai