Enable Javscript for better performance
அவள் அப்படித்தான் ஒரு மாஸ்டர் பீஸூ ன்னு என்னால சொல்ல முடியல - கமல்- Dinamani

சுடச்சுட

  

  அவள் அப்படித்தான் ஒரு மாஸ்டர் பீஸூ ன்னு என்னால சொல்ல முடியல - கமல்

  By DIN  |   Published on : 03rd May 2017 04:18 PM  |   அ+அ அ-   |    |  

  kamal

   

  அந்த குதூகலமான மாலை நேரத்தில் கமல்ஹாசனுக்காக அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில்  காத்திருந்தேன். உள்ளே வந்த கமல், "ஹலோ , ஹௌ ஆர் யூ, எப்ப வந்தீங்க" என்று எங்களை வினவினார்.

  "ஃபைன் கமல், பை தி வே, உங்க ப்ரோக்ராம் என்ன இன்னிக்கு" என்று கேட்டேன்.

  "இன்னிக்கா, 12 மணி வரைக்கும் "மாற்றுவின் சட்டங்களே (தமிழ் "சட்டம் ஒரு இருட்டறை")"  மலையாளப் பட ஷூட்டிங். அப்புறம் டிக்..டிக்..டிக் பாட்ச் ஒர்க்; மத்தியானதுக்கு மேல மகாபலிபுரம்" என்றார்.

  "வி வாண்ட் டு  கம் அலாங் வித் யூ கமல்"          

  "ஓ . எஸ்.வாங்க..வித் ப்ளஷர்..வண்டியில அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.ஓ கே" என்றுஉடனே சம்மதம் தந்தார்.

  காரில் போகும் பொழுது பம்பாய பத்திரிகையாளர்கள் பற்றிச் சொன்னார் கமல்.

  பாம்பே பத்திரிக்கைகாரங்களுக்கும் மெட்றாஸ் பத்திரிக்கைகாரங்களுக்கும் அடிப்படைல நிறைய வித்தியாசம் இருக்கு. இங்கிருக்கறவங்க ஒரு ஆர்ட்டிஸ்ட்டை விமர்சிக்கிறதுல ஒரு எல்லை வச்சிருக்காங்க. கோடு போட்டுக்கிட்டிருக்காங்க .ரொம்ப ரேரா சில சமயங்கள்ல பர்சனல் விஷயங்கள் வெளிய வர்றதுண்டு . பம்பாய் ஜர்னலிஸ்ட்டுகளோட அடிப்படையே இந்த பர்சனல் சமாச்சாரங்கள்தான்.  என் வீடு, மனைவி, உறவினர்கள், இப்படி எல்லாத்தையும் போட்டு கொதறுவாங்க.  இது என்ன விதமான ஜர்னலிசம்ன்னு எனக்கு புரியல. என்னை விமர்சியுங்கள், என் நடிப்பை அக்கு வேறு ஆணி வேறாக அலசுங்கள்.என் குடும்பத்தை  எதிலுமே சம்பந்தபபடுத்தாதீர்கள்.

  "மாற்றுவின் சட்டங்களே" மலையாளப் பட ஷூட்டிங் முடிந்து எங்களை ஆழ்வார்பேட்டை வீட்டில் இறக்கி  விட்டுச் சென்ற கமல், " ஜஸ்ட் ரிலாக்ஸ்..ஓன் அவர் கழிச்சு நாம மறுபடி புறபபடலாம்" என்று சொல்லி விட்டுச் சென்றார்.

  மகாபலிபுரம் நோக்கி பயணம் மீண்டும் தொடர்ந்தது.

  "இங்க எல்லாருக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் பிடிச்சிருக்கு. மிகைப்படுத்துறது ரத்தத்துல கலந்திருக்கு. 'கமல் பெர்பார்மென்ஸ் ஸூப்பர்ப்'னு யாராவது சொன்னா நிச்சயமா  அது மிகைதான்  அப்படி நான் இன்னும் ஒரு படமும் பண்ணல. ஓரளவு பண்ணினது "அவள் அப்படித்தான்"னும் , "ராஜ பார்வை"யும். ஒவ்வொருத்தத்தரோட லைன் ஆஃப்  திங்கிங் வேற மாதிரி இருக்கு.

  ஏன் கமல் , "அவள் அப்படித்தான்"னுக்குப் பிறகு அந்த மாதிரி ஒரு படம் ஏன் செய்யல இதுவரை? என்று கேட்டேன்.

  வாய்க்கலை.அவவளவுதான். அவள் அப்படித்தான் னுக்கு ஒரு ருத்ரய்யா இருந்தார். பல பேர் சொல்ற மாதிரி அதை ஒரு மாஸ்டர் பீஸூ ன்னு என்னால சொல்ல முடியல. அது ஒரு நல்ல அப்ரோச். மனப்பூர்வமான முயற்சி. டெக்கினிக்கலா பல ஓட்டைகள்  அந்தப் படத்துல. அப்ப பாப்புலரா இருந்தவங்க நடிச்சதுனாலயும், கருப்பு வெள்ளையா இருந்ததுனாலயும் அந்த ஓட்டைகள்  பெரிசா தெரியல. அவரோட "கிராமத்து அத்யாயம்" பார்த்தேன். ஸ்க்ரிப்ட் ரொம்ப வீக். டெக்னிகலா கூட புவர்தான்.

  ஹீரோயின் டாமினேஷன் அதிகம் இருக்கிற "மூன்றாம் பிறை" மாதிரி படத்துல நடிக்க எப்படி ஒத்துக்கிட்டிங்க?

  "இட் எஸ் அ ப்யூட்டிபுல் சப்ஜெக்ட் . ஸ்ரீதேவி டாமினேட்  பண்ற சப்ஜெக்டா இருக்கலாம். பட் அந்த கேரக்டர் டாமினேட் பண்றதுக்கு தூண்டுகோலான  அழுத்தமான கேரக்டர் என்னோடது. இயல்பாவே நல்ல ஆர்டிஸ்ட்டான ஸ்ரீதேவி கொஞ்சம் ஸ்ட்ரெய்ன் பண்ணினா போதும்; அவார்ட் வாங்குற கேரக்டர் அது. 

  நடிக்க நடிக்கதான் நடிப்பு மெருகேறும். நான் ரஜினி மாதிரி ஓவர் நைட் ஸ்டாராயிடல.எப்படியெல்லாமோ என்னவெல்லாமோ செஞ்சு அலைஞ்சு நடிகனானேன். என்னதான் திறமையிருந்தாலும் விதி என் பக்கம் சாதகமா இல்லனா என்னிக்கோ நான் வாஷ் அவுட் ஆகி இருப்பேன். "உல்லாசப் பறவைகள்", "அவள் அப்படித்தான்" மாதிரி படம் பண்ணா போதும்னா, "மீண்டும் கோகிலா", "குரு"  போன்ற படங்களில் நான் இருந்திருக்கமாட்டேன். இது ஒரு கத்தி முனை சஞ்சாரம் மாதிரி. பேலன்ஸ்ட் தவறாமயிருக்கணும். எவ்வளவுதான் ஜாக்கிரதையா இருந்தாலும் சில சமயம் பேலன்ஸ் தடுமாறுது. கீழ விழாம சமாளிச்சுகிட்டு நிக்கணும்.

  இரவு ஏழரை மணிக்கு ஆழ்வார்பேட்டை வீட்டுக்குள் கார் நுழைந்தது. இதற்கு மேலும் அவரை தொந்தரவு செய்யாமல் புறப்பட்டோம்.

  சந்திப்பு: உத்தமன்

  (சினிமா எக்ஸ்பிரஸ் 01.12.83 இதழ் ) 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai