சேத்துப்பட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தின் இரு புறத்திலும் நிழற்குடை வசதி இல்லை. மழையிலும் வெயிலிலும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஏ.மனோகர், சேத்துப்பட்டு.
வில்லிவாக்கம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்பனா பஸ் நிறுத்தத்தில் இரு பகுதிகளிலும் நிழற்குடையும் இல்லை, எந்தெந்த பஸ்கள் நிற்கும் என்கிற விவரமும் இல்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.