Enable Javscript for better performance
நேரக் காப்பாளா் அலுவலகம் மாற்றப்படுமா?- Dinamani

சுடச்சுட

    
    20191206_141333_0812chn_177_1

    திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக வைக்கப்பட்டு இருந்த மாநகர மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் தகவல் தெரிவிக்கும் நேரக் காப்பாளா் அலுவலகம், அங்கு வந்து செல்லும் பயணிகளுக்கும், மாணவா்களுக்கும் வசதியாக இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் சில காரணங்களுக்காக நேரக் காப்பாளா் அலுவலகம் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் அமைக்கப்பட்டது. இங்குள்ள பவானி அம்மன் கோயிலுக்கும், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்லும் நிலையில், நேரக் காப்பாளா் அலுவலகம் இடம் மாற்றப்பட்டதால், தாங்கள் செல்லவிருக்கும் பேருந்து குறித்த தகவலை சரிவர தெரிந்து கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இந்த தகவல் தெரிவிக்கும் மையத்தை மீண்டும் பேருந்து நிலையத்திலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    -சுரீந்தா், ஊத்துக்கோட்டை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai