கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்

சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம், அயப்பாக்கம் பகுதிகள் அண்மைக்காலமாக வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன.

சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம், அயப்பாக்கம் பகுதிகள் அண்மைக்காலமாக வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதிக்கு 73சி, 77ஏ ஆகிய இரு மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. அதுவும் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் செல்வதால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஜோசப், அயப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com